அருளானந்தம் ஞானசீலன்


இலங்கைத் திருநாட்டின் வடபகுதியின் கிளிநொச்சி மாவட்ட பூநகரிப் பிரதேசத்தின் தென்பகுதியான குமுழமுனை பல்லவராயன்கட்டு எனும் கிராமத்தில் அருளானந்தம் அக்கினேஸ்அம்மாவுக்கும் மகனாக 1960.01.01ஆம் திகதி ஞானசீலன் (அமுதன்) என்ற பெயர் சூட்டினார்கள். இவர் தனது ஆரம்பக் கல்வியினை பூநகரி மகா வித்தியாலயத்தில் தரம் 10 வரை கற்றார். பாடசாலைக் காலத்திலேயே நாடகத்தில் ஆர்வம்மிக்கவராக விளங்கிய இவர் 1975முதல் பல நாடகங்களில் நடத்ததுடன் நாடகங்களை பழக்கியும் வந்துள்ளார். சிங்கப்பூர் சிங்காரி, உன்கண்ணில் நீர் வழிந்தால், அவசரகார அப்பா ஆகிய நாடகங்களையும் நெறிப்படுத்தியுள்ளார்

இதுமட்டுமல்லாமல் பட்டான் பட்டாளம், தூண்டல்மீன், தாயின்ஆனை, வெற்றிநிச்சயம் ஆகிய தெருவெளி நாடகய்களிலும் நடித்துள்ளார். இவர் 20 வருடங்களுக்கு மேல் நாடகத்துறையில் கால் பதித்து வருகிறார். இவரது கலைச்சேவையைப் பாராட்டி பூநகரிப் பிரதேச செயலக கலாசாரப் பேரவை கலைநகரி விருது வழங்கி கௌரவித்துள்ளது. தொடர்ந்து இக் கலைஞன் தனது கலைச்சேவையினை ஆற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *