
செந்நிறமாய் நெல்அசையும் பொன்னகராய் பூநகரி மண்ணின் செம்மன்குன்று கிராமத்தில் பிறந்த இவர் தனது பள்ளிப்படிப்பு காலத்தில் இருந்து ஓவியத்தறையில் ஆர்வம் கொண்டு எப்பொழுதும் புதிதாக தனது பாணியால் ஏதாவது ஓர் படைப்பை படைக்கும் ஆற்றலுடன் காணப்பட்டபோது ஓவியத்தடன் சேர்ந்து சினிமா துறையில் காலடி வைத்தார். பல்கலைக்கல்வியில் உளவியல் துறையில் சிறப்பு பட்டத்தை பெற்றவர். சினிமாத்துறையில் இயக்குநராக தனது பணியை ஆரம்பிக்கின்றார். இயக்குநராக மட்டும் இருந்து விடாமல் பாடலாசிரியராகவும், மெல்லிசை பாடகராகவும், நடிகராகவும் பல திரைப்படங்களில், குறுந்திரைப்படங்களில் பணியாற்றியவர்.
இருவிழி, மெழுகு, மனவேலி எனும் குறுந்திறைப்படங்களை இயக்கியுள்ளார். அத்துடன் உன்னைச்சேரவே காரிகையே, இராவணதேசத்து தமிழா, விலகாதே, வழித்துனை, தாயகத்திருநாள், எனும் காணொளிப்படங்களை இயக்கியுள்ளதுடன் சிறந்த இயக்குநர், சிறந்த பாடலாசிரியர்,என சினிமாத்துறையில் பல விருதுகளையும் பெற்றதுடன் பக்திப்பாடல்கள், சினிமாபாடல்கள், புரட்சிப்பாடல்கள் என 30 ற்கும் மேற்பட்ட பாடல்களிற்கு தனது கவிவரிகளுடன் பாடலாசிரியராக உயிரூட்டியுள்ளார். தற்போது மெல்லிசைப்பாடல்களை படைப்பதுடன் தென்.இந்திய சினிமாத்துறையில் பராசக்தி,மதராஸி ஆகிய திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
தற்போதும் தென்னிந்திய பின்னணி பாடகர்களான அனுராதா ஸ்ரீராம் மகராஜன்,குப்புசாமி,யோகஸ்ரீ,கோவைகமலா,அருணா,ஆகியோரின் குரலில் தயாரிhகிக் கொண்டிருக்கும் பூநகரி மண்ணித்தலை சிவன் ஆலய தெய்வீக இறுவெட்டில் ஒன்பது பாடல்களும் இவரது பாடல்வரிகளில் உருவாகியுள்ளது. அத்துடன் ஓவியத்துறையிலும் தனது படைப்பாற்றலை ஆலய வர்ண வேலைகளின் மூலம் காட்டிவருகின்றார். இவரது கலைச்சேவையை பாராட்டி 2025 ம் ஆண்டு நடைபெற்ற பிரதேச பண்பாட்டு விழாவில் இளங்கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர். இக் கலைஞன் தனது கலைச்சேவையினை தொடர்ந்து ஆற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply