
நெய்தல் கிராமமாாகியநாச்சிக்குடாமண்ணிலே1988 ஆம் ஆண்டுமுடியப்பு–ஞானசீலிதம்பதிக்குமகளாகமுடியப்பு–மரியசுபாசினிபிறந்தார். இவர் சிறுவயதிலே இசைத்துறை, இலக்கியத்துறையில் ஆர்வமுடையவராகக் காணப்பட்டார் 1998 – 2004 வரையானகாலப்பகுதியில் கிளிக்குடாஅ.த.கபாடசாலையில் கல்விகற்றார். பாடசாலைக்காலத்திலேபாடசாலைநிகழ்ச்சிகளில் கவிதை,பாடல்,நடனம்,நாடகம் என்றவாறுபலபோட்டிகளில் பங்குபற்றியவராவார்.
அத்துடன் பாடசாலைமட்டப்போட்டி,கோட்டமட்டப் போட்டி,மாவட்டமட்டப் போட்டிமற்றும் மாகாணமட்டப் போட்டிகளில் பங்குபற்றிகடந்த 2000,2001,2002,2004 பாடசாலைக்குபெருமைசேர்த்தார்.
2000ஆம் ஆண்டில் தாய்மைஎனும் நாடகதில் சிறந்தபாத்திரமாகநடித்துகோட்டம் மாவட்டங்களில் முறையேமுதலாம் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டார்.
2000ஆம் ஆண்டில் தனி இசை–கிறிஸ்து பிறப்புபாடலை இயற்றிப் பாடிமுதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார். ஆன்மீகநாடகஙடகளில் பங்குபற்றிபாராட்டுப் பெற்றார்.
2001ஆம் ஆண்டில் சாவினைசுமப்பதேன் எனும் பெயரில் தெருக்கூத்தில் சிறந்தபாத்திரமாகநடித்துபாராட்டுபெற்றவராவார்.
2005 இல் தனதுஉயர்தரக் கல்வியையாழ்ஃ திருக்கும்பகன்னியர் மடத்தில் தொடர்ந்தார். நாட்டின் அசாதாரண சூழ்நிலையின் காரணமாகதனதுஉயர்தரக் கல்வியைகிளிஃமுழங்காவில் மகாவித்தியாலயதேசியபாடசாலையில் தொடர்ந்தார். 2006, 2007 காலப்பகுதியில் தமிழ்த்தினப்போட்டிகளில் கொடவணக்கப்பாடல்,தமிழ்மொழிவாழ்த்து,தமிழ்த்தாய் வாழ்த்துபாடல்களில் கோட்டம்,மாவட்டங்களில் முறையேமுதலாம் இரண்டாம் இடத்தினைப் பெற்றுள்ளார்.
2008 இல் மித்திரன் மழலைச் சுடரில் கவிதைஇபாடல் எழுதிவெற்றிபெற்றார்.
2018 இல் முதல்சொல் கவிதைப் போட்டிகளில் நான்குவரிக்கவிதை-விழாஇகேடுஇஏடுதலைப்பில் கவிதைஎழுதிவெற்றியாளரானார்.
2018 இல்
காதல் கனவேகலையாதே
காதல்தென்றல் தீண்டாதே
மறந்தும் எண்ணைமறவாதே
எங்கும் அவள் முகம்
எனும் தலைப்பில் கவிதைஎழுதிவெற்றியாளரானார்.
2018 இல் கவியுலகம் பூஞ்சோலையில்-எஞ்சியதுஎதுஎனும் தலைப்பில் கவிதைஎழுதிவாலிசான்றிதழ் பெற்றார்.
2018 இல் ஊலழளநட்சத்திரகவிதைப் போட்டியில்-கூட்டுறவேநாட்டுயர்வு
கவியரங்கமேடையில்-நான் இரட்டைக்கிளவி
அடுக்குதொடர்-4வரிக் கவிதைபோட்டியில் வெற்றியாளராகதெரிவுசெய்யப்பட்டார்.
2018 இல் செந்தமிழ் சாரலில் சீர்வரிசைசீதனமேஇவிகடகவிகவிதைப் போட்டியில் வெற்றியாளராகதெரிவுசெய்யப்பட்டார்.
2018 இல் தேடல் கலைச்சங்கமத்தில் குடிசைவீடும் கூட்டாஞ்சோறும் கவிதைஎழுதிவெற்றியாளரானார்.
2018 இல் நிலாச்சோறும் பூஞ்சோலை-10இல் உயிரும் உறவும்கவிதைபோட்டியில் வெற்றியாளரானார்.
2018 இல் நிலாமுற்றக் கவிதைகளுக்கானதேடலில் கிராமியக் கவிதைஎழுதிகிராமியகவிஞர் பட்டம் பெற்றார்.
2018 இல் நிலாமுற்றத்தில் தலைப்புகவிதையில் கதிரவனின் காதலிஎனும் கவிதையில் முத்திரைபெற்றார்.
2018 இல் மழைநீரைசேகரிப்போம் எனும் தலைப்பில் நிலாமுற்றத்தில் கவிதைக்கானதேடலில் நடுவராகபங்குபற்றிபாராட்டுபெற்றார்.
2020 இல் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் (டீயு) நிறைவுசெய்தார்.
2023 இல் பிரதேச இலக்கியப்போட்டியில் கிராமியவாழ்க்கைமுறையைமதிப்போம் எனும் தலைப்பில் பாடலாக்கம் எழுதி மூன்றாம் இடத்தைபெற்றார்.
2023 மாவட்ட இலக்கியப் போட்டியில் இரண்டாம் இடத்தினைபெற்றுமாவட்டபண்பாட்டுவிழாவில் பாடலாக்ககௌரவத்தைபெற்றார்.
2024கிராமிய பாடலாக்கத்தினை–மீனவர் நாம் எனும் தலைப்பில் பிரதேசமட்ட இலக்கியபோட்டியில் எழுதி இரண்டாம் இடத்தினையும் ,போதையில்லாஉலகம் காண்போம் எனும் தலைப்பில் கவிதைஎழுதி மூன்றாம் இடத்தினையும் பெற்றுபாராட்டுபெற்றார். இவரது கலைச்சேவையை பாராட்டி 2025 ம் ஆண்டு நடைபெற்ற பிரதேச பண்பாட்டு விழாவில் இளங்கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர். இக் கலைஞன் தனது கலைச்சேவையினை தொடர்ந்து ஆற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply