
நுரையோடு முத்தமிடும் அலைகள் திரைகடந்து தூதுவரும் தென்றல் காற்றோடு கலந்துவரும் மண்வாசம் நிறைந்த நெய்தல் நிலமாகிய நாச்சிக்குடா கிராமத்தில் முடியப்பு ஞானசீலிதம்பதிக்கு மகளாக 1993ம் ஆண்டு ஆவணி மாதம் 15ம் திகதி மகளாக பிறந்தார். சிறுவயதில் இருந்து இசைத்துறையில் ஆர்வமுள்ளவராக காணப்பட்டார்.
1999-2010 வரையான காலப்பகுதியில் கிளிஃ நாச்சிக்குடா அ.த.க பாடசாலையில் கல்வி கற்றார். பாடசாலைக் காலத்தில் தமிழ்த்தினப் போட்டி தமிழ்ச்சங்கப் போட்டி, ஆங்கில தினப்போட்டி, பிரதேச சபைப் போட்டிகளில் கவிதை, பேச்சு போன்றவற்றில் பங்குபற்றி கோட்ட, மாவட்ட, மாகாண மட்டங்களில் வெற்றியீட்டியுள்ளார். பாடசாலையில் நடைபெறும் கலைநிகழ்வுகளில் பேச்சு, நாடகம், நடனம், கவியரங்கம், வில்லிசை, நிகழ்வுகளில் பங்குபற்றியதுடன்.
முத்துறையிலும் திறமைபெற்ற ஒருவராவார். தமிழ்ச்சங்க எழுத்துத் தேர்வில் திருக்குறள் இலக்கியத்திறன் போட்டியில் வெற்றியீட்டியுள்ளார். 2010ஆம் ஆண்டு சாதாரண தரப்பரீட்சையில் சித்திபெற்று கிளிஃமுழங்காவில் தேசிய பாடசாலையில் உயர்தரப் பிரிவில் கர்நாடக சங்கீதத்தினை ஒருபாடமாக கற்றார். 2011-2013 வரையான காலப்பகுதியில் பாடசாலையின் தமிழ்மொழித்தினப் போட்டியில் தனி இசையில் 2012ஆம் ஆண்டுகோட்ட, மாவட்டத்தில் 1ஆம் 2ஆம் இடங்களை பெற்றுள்ளார். அத்தோடு குழு இசை, இசைநாடகம் சிந்துநடைக் கூத்து, போன்றவற்றில் பங்குபற்றி மாவட்டம், மாகாணம் என வெற்றியீட்டியுள்ளார். 2012ஆம் ஆண்டுசிறுவர் தினப் போட்டியில் மாவட்டத்தில் நாடகத்தில் முதல் இடத்தினையும் விவாதப ;போட்டியிலும் பங்குபற்றியுள்ளார்.
கிறிஸ்தவ, இந்து ஆலயங்களில் கலைநிகழ்வுகளிலும், போட்டிகளிலும் பங்குபற்றியுள்ளார். 2012ஆம் ஆண்டுநடைபெற்ற கலைப்பண்பாட்டு விழாவில் மன்னார், வவுனியா போன்ற இடங்களில் பாடசாலை சார்பாக இசைநிகழ்ச்சியில் பங்குபற்றியுள்ளார். 2013ஆம் ஆண்டு உயர்தரத்தில் சித்தியடைந்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டு கர்நாடகசங்கீதம் (வாய்ப்பாடு) சிறப்புப்பாடமாக கற்ற பட்டதாரியுமாவார். இன்றுவரை ஆலய மற்றும் பொதுநிகழ்வுகளில் தனது பாடல்களைப் பாடிவருகின்றார் என்பதுடன் தனி இசை, குழு இசைப் பாடல்களை இயற்றி இசைத்துறையில் சிறந்து விளங்குகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது கலைச்சேவையை பாராட்டி 2025 ம் ஆண்டு நடைபெற்ற பிரதேச பண்பாட்டு விழாவில் இளங்கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர். இக் கலைஞன் தனது கலைச்சேவையினை தொடர்ந்து ஆற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply