
அந்தோனி நீக்கிலாப்பிள்ளை என்பவருக்கு மகளாகப் பிறந்த இவர்;, தற்போது ஜேசுமெரில்டன் என்பவரை திருமணம் செய்து நாச்சிக்குடா கிராமத்தில் நிரந்தரமாக வசித்து வருகின்றார்;. தனது ஆரம்பக் கல்வியினை கிளிஃநாச்சிக்குடா பாடசாலையிலும், உயர் கல்வியினை மன்னார் புனிதஃசவேரியார் பெண்கள் கல்லூரியிலும், நுண்கலைமாணி பட்டப்படிப்பினை மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்திலும் கற்று பட்டப் படிப்பில் (குசைளவ ஊடயளள)இல் தேர்ச்சி பெற்றார்.
பாடசாலைக் காலங்களில் கலைநிகழ்வுகளில் தனியாகவும், குழுவாகவும் போட்டிகளில் பங்குபற்றி முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்றுள்ளார்.
அதுபோல நுண்கலைமாணி பட்டப்படிப்பினை தொடர்ந்த காலங்களில் அங்கு நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து முதல்நிலை இடத்தினையும் பெற்றுள்ளார். இதன் காரணமாக பிரசித்திபெற்ற ஆலயத்தின் சாமிப்பாடல் பாடியுள்ளார்.
பட்டப்படிப்பினை தொடரும் காலத்தில் பாடல் போட்டி ஒன்றில் விருதும் இவருக்கு கிடைக்கப் பெற்றிருந்தது. தொடர்ந்து எமது கிராம ஆலயமட்ட போட்டிகளிலும், ஆலயத்திலும் பக்திப் பாடல்களைப் பாடிவருகின்றார்.
தற்போது மாந்தை மேற்குபிரதேசசெயலகத்தில் அபிவிருத்திஉத்தியோகத்தராககடமையாற்றுவதுடன்,தனது கலைத்துறையை மேம்படுத்துவதற்காக இசைத்துறை பயிலும் மாணவர்களுக்கு தனது வீட்டில் இசைகற்று கொடுத்து வருகின்றார். இவரது கலைச்சேவையை பாராட்டி 2025 ம் ஆண்டு நடைபெற்ற பிரதேச பண்பாட்டு விழாவில் இளங்கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர். இக் கலைஞன் தனது கலைச்சேவையினை தொடர்ந்து ஆற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply