
முழங்காவில் பிரதேசத்தில் ஸ்ரீ செல்வயோக சித்திவிநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. ஆரம்பத்தில் வழிப்போக்கர்களால் ஒரு பிள்ளையார் சிலை வைத்து ஆதரிக்கப்பட்டு காலப்போக்கில் ஆலயமாகத் தோற்றம் பெற்றது. வடக்குஇ தெற்கு பாதையில் இருந்து வந்தமையால் இவ் விநாயகர் ஆலயம் மேற்குத் திசையைப் பார்த்தபடி ஆகம விதிகளுக்கு உட்படாமல் அமைந்து காணப்படுகின்றது.
இவ்வாலயத்திற்கு அருகே பழமை வாய்ந்த கிணறு விநாயகருக்கு அபிஷேகம் செய்ய முடியாதவாறு இருந்ததால் பூசகர் மனம் வருந்திய போது மின்னாமல் முழங்காமல் இடி விழுந்ததால் நன்னீர் ஊற்றாக மாறி இன்று வரை வற்றாத புனிதத் தீர்த்தமாக இருந்து வருகின்றது. மின்னாமல் முழங்காமல் இடி விழுந்தமையாலே முழங்காவில் என இடுகுறிப் பெயர் கொண்டு இவ்வூர் அழைக்கப்பட்டதுடன் முழங்காவில் பிள்ளையார் கோவில் எனவும் அழைக்கப்பட்டது 1964 விநாயகர் மூலஸ்தானம் கட்டப்பட்டு 1986 பின் அதிகளவு நிதி கொண்டு புணர் நிர்மானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
திருக்கதீஸ்வரம் செல்லும் அடியவர்களின் முதல் வணக்கஸ்தலம் என்பதுடன் திருக்கேதீஸ்வரம் சென்று திரும்பி வரும் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கும் ஓர் ஆலயமாகவும் விளங்குகின்றது.

Leave a Reply