
இது பூநகரி பிரதேசத்தில் செல்லக்குறிச்சி கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ள ஆலயமாகும். கண்ணகி மதுரையை எரித்துவிட்டு பல இடங்களுக்குச் சென்றதாக ஐதீகங்கள் கூறுகின்றன. இலங்கையில் தரிசித்து சென்ற தலங்களில் இதுவும் ஒன்றாக கூறப்படுகின்றது. பூநகரியில் மறவர் குறிச்சி எனும் கிராமத்தில் மறவர் பரம்பரை மக்கள் கமம் செய்வதும்இ கால்நடை வளர்ப்பதும் தமது தொழிலாக செய்து வந்தனர். இக்காலத்தில் பூநகரியில் திருப்பாதம் ஊன்றிய கண்ணகி மறவன் குறிச்சி கிராமத்தில் பத்தினி காடு என்றும் தற்போது கூறப்படும் இடத்தில் களைப்பாறிய போது ஒரு வயோதிப பெண்ணிடம் கதைத்து விட்டு திடீரென மறைந்ததாக வாய்மொழிக் கதை உள்ளது.
அதே நாள் மறவன் குறிச்சி மாடு மேய்க்கும் இடையர்கள் செல்லையா தீவில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது அங்கு நின்ற கொன்றல் மரத்தடியில் கிழவி வடிவில் கண்ணகி அமர்ந்தவாறு சிறுவர்களை அழைத்து தனக்கு பசிக்கின்றது என்று கேட்டு சாப்பாட்டுப் பொருட்களை வரவழைத்து சிறுவர்களுக்கு கொடுத்து நெல் விதைக்கும் போது வித்தநாள் அபிஷேகம்இ பயிர்களின் நலன் வேண்டி பயிர் பொங்கல் படைக்கும் போது கிழவி மறைந்ததாக சிறுவர்கள் பெரியவர்களிடம் கூறிய போது வந்தது அம்மன் என கொன்றல் மரத்தடியில் பூஜை வழிபாடுகள் செய்து வந்தனர்.
இவ் வழிபாட்டு தூய்மையால் இம்மக்கள் எல்லோரும் செல்வ செழிப்பு உள்ள மக்களாக வாழ்கின்றனர்.

Leave a Reply