திருமதி சரணீதரன் சரண்யா (நடனம்)

Posted on

by

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் 1992 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 14 ஆம் நாள் கனகேந்திரன் காந்தரூபி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார்.சிறுவயதில் பச்சிலைப்பள்ளியின் அரசர்கேணி கிராமத்தில் வளர்ந்து பின்னர் முரசுமோட்டைக் கிராமத்தில் நவஜீவனம் எனும் பாடசாலையில் பாலர் படிப்பை ஆரம்பித்தார்.அங்கு சிறுவயதில் நடன நிகழ்வுகளில் பங்குபற்றுவதில் திறமையாக செயற்பட்டார்.

ஆரம்ப வகுப்பிலேயே புஸ்பாஞ்சலி, ஒளிவிழாவில் மாதாவாக நடன ஆற்றுகை செய்திருந்தார்.


பின்னர் கிளிஃமுருகானந்தா ஆரம்ப வித்தியாலத்தில் தனது ஆரம்பக் கல்வியை தொடர்ந்து அங்கும் நடன நிகழ்வுகளில் ஈடுபட்டார்.தனது ஏழு வயதில் நடனக் கல்வியை திறம்பட கற்பதற்காக திருமதி.றாஜினி பாஸ்கரன் ஆசிரியரிடம் பிரத்யோக வகுப்பில் இணைந்து நடனத்துறையில் பயிற்சி பெற ஆரம்பித்தார்.


தொடர்ந்து பாடசாலைக் காலங்களில் பல கலைநிகழ்வுகள் தமிழ்த்தினப்போட்டிகளில் பங்கு பற்றி கோட்டம் வலயம் மாகாண மட்டங்களில் பல பரிசில்களைப் பெற்றார்.பின்பு வட இலங்கை சங்கீத சபை பரீட்சைகளிலும் பங்குபற்றி தொடர்ந்து உயர்கல்வியை யாஃஇராமநாதன் மகளிர் கல்லூரி ,கிளி.முருகானந்தா கல்லூரியிலும் இராமநாதன் நுண்கலைப}டத்துக்கு தெரிவாகி இருந்தார்.இராமநாதன் நுண்கலைப்பீடத்துக்கு கல்லூரியில் 2013 ஆம் ஆண்டு இணைந்து கலாகீர்த்தி திருமதி சாந்தினி சிவனேசன் அம்;மையார் அவர்களிடம் கந்றிருந்தார். 2015 ஆம் ஆண்டு மாங்குளத்தில் உலக யோகா தினத்தில் சிவ நடன ஆற்றுகை,2016 ஆம் ஆண்டு தைப்பொங்கல் விழாவுக்கான நடராஜர் கௌத்துவம் போன்றவற்றை ஆற்றுகை செய்திருந்தார்.2017 ஆம் ஆண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நாட்டிய நடனத்தில் அம்மன் பாத்திரம் ஏற்றிருந்தார்.பின்னர் இந்திய தூதரகத்தால் இடம்பெற்ற தில்லானா நிகழ்வில் பங்குபற்றியிருந்தார்.2018 ஆம் ஆண்டு யாழ்பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் வரவேற்பு நடனம்,தில்லானா போன்றவற்றிலும் பங்குபற்றியிருந்தார்.2018 ஆம் ஆண்டு வடஇலங்கை சங்கீத சபையின் ஆறாம் தரத்திற்கும் தோற்றி விசேட சித்தி பெற்றார்.2019 ஆம் ஆண்டில் திருமதி சாந்தினி சிவனேசன் அம்மையார் அவரது நெறியாழ்கையில் அவைக்காற்றுகை நிகழ்விலும் பங்குபற்றி திறம்பட ஆற்றுகை செய்து கலாவித்தகர் எனும் விருதினை பெற்றார்.2019 ஆம் ஆண்டு நுண்கலைமாணி பட்டத்தைப் பெற்றார்.
கணேஸ் சரணீதரன் அவர்களை திருமணம் செய்து இயக்கச்சி பகுதியில் வசித்து வரும் இவர் கங்கைத் தமிழ் மன்றம் எனும் கலைமன்றமூடாக நுற்றுக்கணக்கான மாணவர்களுக்கு நடனப் பயிற்சி வழங்கி வருகின்றார்;.இவருடைய மாணவர்கள் இன்றும் பல கலைநிகழ்வுகளை பிரதேசம்,மாவட்டம் மாகாணம் என வழங்கி வருகின்றார்.

பச்சிலைப்பள்ளியின் மிகச் சிறந்த நடனக் கலைஞராக திகழும் சரணீதரன் சரண்யா அவர்களுக்கு 2025 ஆம் ஆண்டின் இளங்கலைஞர் விருது வழங்குவதில் பச்சிலைப்பள்ளி பிரதேச கலாசார பேரவையும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும் பெருமை கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *