கந்தசாமி தட்சணாமூர்த்தி

Posted on

by

முல்லையடி பளையில் காத்தமுத்து கந்தசாமி இராசமணி மகனுக்கு 1962.07.07 ஆம் ஆண்டு பிறந்தார்.இவர் தனது ஆரம்பக் கல்வியை பளை மகா வித்தியாலயத்தில் கற்றார்.

1977 ஆம் ஆண்டு இவர் தனது 15 ஆவது வயதில் இருந்து இசை நாடகத்தில் நடித்து வருகிறார்.அல்லி அர்ச்சுனா ,பவளக்கொடி,கோவலன் கண்ணகி,அரிச்சந்திரன் மயான காண்டம்,காத்தவராயன் சிந்துநடைக்கூத்து,போன்ற பாரம்பரிய நாடகங்களையும்,மன்னிப்பு,மகுடம் காத்த மங்கை,கரைதை; தொடாத அணைகள்,அடிமை ஜனங்கள்,புலவனின் சபதம்,நினைவுகள் சாவதில்லை,வேட்டைக்காரன் போன்ற சமூக நாடகங்களிலும் நடித்து உள்ளார்.இவை அனைத்து நாடகங்களிலும் நடித்து உள்ளார்.அரிச்சந்திர மயான காண்டத்தில் விஸ்வாமித்திரராகவும்,வள்ளி திருமணத்தில் முகரனனாக பவளக்கொடியில் கிருஸ்ணனாகவும் கே.வி.நற்குணத்தின் நெறியாள்கையில் நடித்துள்ளார்.

அண்மையில் காத்தவராயன் கூத்தில் சிவபெருமானாகவும் சின்னானாகவும் நடித்துள்ளார். ;.இன்று வரை கலைத்துறைக்காக காத்தவராயன் சிந்துநடைக் கூத்தினை பழக்கி வரும் கந்தசாமி தட்சணாமூர்த்தி அவர்களுக்கு 2025 ஆம் ஆண்டின் கலைத்தென்றல் விருது வழங்குவதில் பச்சிலைப்பள்ளி பிரதேச கலாசார பேரவையும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும் பெருமை கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *