
புலோப்பளை கிழக்கு பளையில் 1994 ஆம் ஆண்டு பிறந்த திருமதி.ஜிலானி சிந்துஜன் நடனத்துறையில் சிறந்து விளங்கும் இளங்கலைஞராவார். இவர் தனது கல்வியை பளை மத்திய கல்லூரியில் கற்றதுடன் சிறு வயது முதலே நடனத்துறையில் சிறந்து விளங்கினார். இவர் ஆரம்பத்தில் தனது கல்வியை திருமதி.சிவானந்தன் கருணைகலா திருமதி. சங்கீதமதுரன் ஆகியோரிடம் கற்றார்.
இவர் மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா பல்கலைக்கழகத்தில் நுண்கலைமானி பட்டத்தை முதலாம் வகுப்பில் பெற்றுக்கொண்டார். தற்போது முது தத்துவமானி கற்கை னெறியை பேராதனைப் பல்கலைகழகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
அரச நடன விழா 2017, 2018, 2019 இலும் அரச நாடக விழா 2017 இலும் இளைஞர் சேவைகள் மன்ற விருதை 2021 இலும் தேசிய ரீதியில் விருதுகளாகப் பெற்றுக்கொண்டார்.
பச்சிலைப்பள்ளியில் நாட்டிய க்ஷேத்ரா நடனாலயம் என்ற கலைமன்றத்தை 70 வரையான மாணவர்களை வைத்து 2018 முதல் நடாத்தி வருகின்றார். இவருடைய மாணவர்கள் விழாக்கள் நிகழ்வுகளிலும் சிறந்த முறையில் ஆற்றுகை செய்து வருகின்றார்.
இவ்வாறு நடனத்துறையில் பல விருதுகளை பெற்று பச்சிலைப்பள்ளிக்கு பெருமை சேர்த்த திருமதி.ஜிலானி சிந்துஜன் அவர்களுக்கு இளங்கலைஞர் 2024 விருதை வழங்குவதில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும் கலாசார பேரவையும் பெருமை கொள்கிறது. 2024 ஆம் ஆண்டு மாவட்டமட்ட இளங்கலைஞர் விருதும் கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டுப் பேரவையால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Leave a Reply