
ஈழத்து எழுத்தாளர்களில் தமிழ்கவி என அழைக்கப்படும் பெண் எழுத்தாளர் இவர் 1947.07.19 ஆம் திகதி வவுனியா மாவட்டத்தில் சின்னபுதுக்குளம் கிராமத்தில பிறந்தார்.களச்செயற்பாட்டாளர்,விடுதலைப்புலிகள் அமைப்பில் சுமார் 18 ஆணடுகள் கலை –பண்பாட்டுத்துறையில் பணியாற்றியவர்.வீதி மற்றும் மேடை நாடகங்கள்,வானொலி-தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ,பேச்சு,கவிதை,தொடர் நாடகங்கள் என்பவற்றில் பணியாற்றியவர்.மகப்பேற்று மருத்துவிச்சியாக பல காலம் பணியாற்றியவர்.
ஆரம்பக்கல்வியை வவுனியா அரசினர் தமிழ்கலவன் பாடசாலையிலும்,உயர்கல்வியை வவுனியா ரம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்திலும் பயின்றார். 14 வது வயதில் எம+திய தாய் என்ற கவிதை 05 வருடத்திற்கு பின் கொழும்பு வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்தது.
தமிழ்கவியின் முதலாவது நாவல் இனி வானம் வெளிச்சிடும் இந்நாவல் பலதரது பாராட்டுதல்கள் பெற்றன.
இருள் இனி விலகும் இரண்டாவது நாவலும் வெளிவந்தது.இறுதிப்போரில் இராணுவத்துடன் சரணை அடைந்து 02 ஆண்டுகள் புனர்வாழ்வு பெற்ற இவர் இந்நாட்களில் ஊழிக்காலம் நாவலை வெளியிட்டார்.
இதன் பின் இனி ஒரு போதும்,காடுலாவு காதை,நாவலும் தற்போது புயலுக்கு பின் நாவலும் எழுதியதுடன்
காடுலாவு காதை கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் சிறந்த நூல் பரிசாக தெரிவு செய்யப்பட்டது.
2022 நரையன் சிறுகதை தொகுப்பு வெளிவந்தது.
பெற்ற விருதுகள்
2002- இனி வானம் வெளிக்கும் – வடக்கு கிழக்கு ஆளுநர் விருது.
2024 பண்பாட்டு திணைக்களத்தின் மூத்தகலைஞருக்கான முதலமைச்சர் விருது.
2015 –கலாபூசணவிருது மற்றும் மாவட்ட கலைக்கிளி,கரைச்சி பிரதேச செயலக கரைஎழில் விருதுகளையும் பெற்றுக்கொண்டார்.

Leave a Reply