
1960 ஆம் ஆண்டு கால அளவில் இப் பகுதியில் வாழ்ந்த கந்தர் எனப்படும் பெரியார் ஒருவர் தனது வயலி அடிக்கடி யானைகளின் தொல்லை அதிகரித்து காணப்பட்டமையால் அதிலிருந்து விடுபட பிள்ளையாரை மனதில் தியானித்து அங்கிருந்த ஒர் ஆலயமரத்தின் கீழ் ஒரு கல்லை வைத்துப் பிள்ளையாராக எண்ணித் தீபமேற்றி வழிபட்டார் அதன்பின் அவருக்கு யானையால் தொல்லை நீங்கிற்று இதனால் அவர் தொடர்ந்து நாள்தோறும் தீமேற்றி வழிபட்டுப் பொங்கல் பிரார்த்தனைகள் செய்து வந்தார்.
அவ் வேளை மரியார் என்னும் கிறிஸ்தவக் குடிமகன் ஒருவர் தனது வயலிலும் வீட்டிலும் பாம்புத் தொல்லை அதிகரித்திருபதால் உறங்க முடியவில்லை என்றும் இதற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லைஎ என்றும் இதற்கு ஏதாவது யோசனை சொல்லுமாறு திரு.கந்தர் அவர்களிடம் கேட்டார். அப்போது அவரை நாகதம்பிரானை வழிபாடுமாறு கூறினார். இதனால் பிள்ளையாருக்கு அருகில் ஒரு கல்லை வைத்து நாகதம்பிரானை வழிபட்டார். இதனால்பாம்பு தொல்லை நீங்கிற்று எனினும் அவர் கிறிஸ்
தவன் என்பதால் தொடர்ந்து அதை செய்ய முடியவில்லை பின்பு இராசரத்தினம் அவர்கள் நாகதம்பிரானை வழிபட்டார்.
காலப்போக்கில் இரு தெய்வங்களுக்கும் தூப தீப பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தனார்.
இதை ஆரம்பிக்க காரணமாகயிருந்த திரு.மரியார் அவர்களுக்குப் பொங்கல் படையலின் ஒரு பகுதி கையளிக்கப்பட்டது நாகதம்பிரான் தகரக் கொட்டகையிலும் ஆலடிப்பிள்ளையார் ஓலையால் வேயப்பட்ட கொட்டைகையாலும், தஞ்சமடைந்தனர். ஆலமரங்கள் இரண்டும் பெரியதாகி விழுதுகள்விட்ட போது இரு மரங்களின் விழுதுகளையும் ஒன்றாக சேர்த்து கட்டப்பட்டன. இப்போது பிள்ளையாரின் கற்பகிரகத்தின் பின்னே இப்போதும் காட்சியளிப்பதை காணலாம். ஆயினும் விழுதுகளை முடிந்து விட்டவர் இரண்டு நாட்களில் பின் இறைபதம் எய்து விட்டதாக அறிய முடிந்தது. திரு.கந்தர் அவர்களாலும் அவரது குடும்பத்தாராலும் வழிபடப் பெற்ற ஆலடிப் பிள்ளையார் காலப்போக்கில்அவ்வூர் மக்களின் வழிபாட்டுத் தலமாக மாறியது.

Leave a Reply