ஸ்ரீ சிவன் ஆலயம் ( உதயநகர் மேற்கு)

Posted on

by

வயல் வெளிகளையும், குளங்களையும் தன்னகத்தே ஒரு மித்த இயற்கை எழில் கொஞ்சும் நில வளமும், நீர் வளமும் மிக்க வந்தோரை வாழ வைத்த மாவட்டம் கிளிநொச்சி மாவட்டம் அம் மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலாளர பிரிவில் கிளிநொச்சி நகரை அண்மித்த பிரதேசமாக உதயநகர்மேற்கு கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தின் வட பாகத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் வீதிக்க மேற்குப்புறமாக முப்பது அரசு வீட்டுத்திட்ட வீதிக்கு கிழக்கு புறமாக இந்து இளைஞர் மன்ற வீதிக்கு தெற்கு புறமாக உள்ள பரந்த நிலப்பரப்பில் அமைந்துள்ள பல் வகைச்சிறப்பு பெற்ற ஆலயமே ஸ்ரீ சிவன் ஆலயமாகும் இங்குபார்வதி சமேத அம் பெருமானாகிய ஸ்ரீ சிவன் இங்கிருந்து அனைத்து மக்களுக்கும் அருள் ஆட்சி வழங்கி வருகின்றார்.


உதயநகர் கிராமமானது 1970 இலங்கையின் பல மாவட்டங்களில் இருந்து வந்து குடியேறிய மக்களினால் இக் கிராமம் உருவாக்கம் பெற்றது. இங்கு வாழும் மக்களில் பெரும்பாலனோர் சைவ சமயத்தை சார்ந்தவர்களாகவும் தமிழ் பண்பாட்டை பேணிக்காப்பவர்களாகவும் காணப்பட்டனர் இப் பிரதேசத்தில் ஆரம்பத்தில் குடியேறிய பெரியவர்கள் சைவ சமயத்தின் மீது கொண்ட பற்றுதலினாலும் இங்கு வாழும் மக்கள் சைவசமய ஒழுக்க விழுமியங்களைப் பின்பற்றி எதிர்காலத்தில் பண்பாடு நிறைந்த மக்களாக வாழ வேண்டும் என்ற தூர நோக்கில் சிந்தித்ததினாலும் இப் பிரதேசம் சிவனருள் பெற்று வாழ முதாதையர்களால் உருவாக்கப்பட்ட இவ் ஆலயமாகும்.


நீண்ட காலமாக தமது கிராமத்தில் ஒருசிலர் ஆலயம் அமைக்க வேண்டும் என்ற பேர் ஆர்வம் கொண்ட பெரியவர்களுக்கு எல்லாம் வல்ல எம்பெருமான அவர்களது மன வெளியில் அடிக்கடி காட்சி தந்ததன் நிமிர்த்தம் இப் பிரதேசத்தில் நாகபாம்பு ஒன்று அடிக்கடி காட்சி அளித்ததை உணர்ந்து உருவானதே எம் பெருமானின் ஸ்ரீ சிவன் ஆலயமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *