
1955.06.15 ஆம் திகதி வறணியில் பிறந்த இவர் கண்டாவளை வைத்தியசாலையடியை வசிப்பிடமாகக் கொண்டவர். ஹார்மோனியக் கலைஞரான இவர் பல கூத்துகள் உள்ளிட்ட கலை நிகழ்வுகளுக்கு ஹார்மோனியம், ஓகண், மெலோடிகா, எக்கோடியன் ஆகியவற்றினை வாசித்து இசை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வாய்ப்பாட்டிலும் இவர் வல்லவராக விளங்குகின்றார்.
இவர் கலைத்துறைசார் கல்வியை அச்சுவேலியைச் சேர்ந்த ஹார்மோனிய வித்துவான் பிலிப் அவர்களிடமும், ஜோன் ஹவாஸ் அவர்களிடமும் இருந்து முறைப்படி பெற்றுக்கொண்டார். கண்டாவளை முத்தமிழ் மன்றத்தின் ஸ்தாபக உறுப்பினர்களுள் ஒருவராக விளங்கும் இவர், காத்தவராயன் சிந்துநடைக் கூத்து மற்றும் சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்திரா மயானகாண்டம் ஆகிய இசைநாடகங்களுக்கு ஹார்மோனியக் கலைஞராகவும் பக்கப்பாட்டுக்காரராகவும் நீண்டகாலமாகப் பங்களிப்பு நல்கி வருகின்றார்.
இவரது கலைச்சேவையைப் பாராட்டி 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற கண்டாவளைப் பிரதேச பண்பாட்டுப் பெருவிழாவில் வைத்து ‘கலை ஒளி’ விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுதுடன், அதே ஆண்டு இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டுப் பெருவிழாவில் வைத்து ‘கலைக் கிளி’ விருதும் வழங்கிப் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply