
ஆற்றுகைக் கலைஞராகவும் விவாத அரங்குகளில் பேச்சாளராகவும் விளங்குகின்ற இவர், 1988.09.11 ஆம் திகதி தர்மபுரத்தில் பிறந்தார். அனோஜா வீரசிங்கம் போன்ற அரங்க ஆளுமைகளிடம் இருந்து ஆற்றுகைப் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்ட இவர், கொழும்பில் இயங்கிவரும் ஆற்றுகைக் கலைகளுக்கான அபின அகடமியுடன் இணைந்து ஐந்நூறுக்கு மெற்பட்ட ஆற்றுகைகளைத் தமிழிலும் சிங்களத்திலும் மெற்கொண்டுள்ளார்.
யோகாசனத்தில் விற்பன்னரான இவர், அதற்கான பயிற்சிகளை இந்தியாவில் பெற்றுக்கொண்டார். அத்துறையில் ‘யோகாச்சார்யா’ பட்டத்தினைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பல்வேறு விளம்பரப் படங்களிலும் இவர் தற்போது நடித்துவருகின்றார்.

Leave a Reply