திரு அப்பாக்குட்டி ஐயம்பிள்ளை (பசுந்தரையான்)

Posted on

by

1953.11.10 ஆம் திகதி நெடுந்தீவில் பிறந்த இவர், கண்டாவளை பிரதேசத்தில் பெரியகுளம் கிராமத்தில் வாழ்ந்துவருகின்றார். ஆரம்பக் கல்வியை நெடுந்தீவு இராமநாதர் வித்தியாலயத்தில் பெற்றுக்கொண்ட இவர், தனது தந்தையிடமிருந்து புராணப் படிப்பு, பாட்டுக்குப் பயன் சொல்லல் ஆகியவற்றை இள வயதில் இருந்து கற்றுக்கொண்டதுடன், நெடுந்தீவைச் சேர்ந்த பதிவாளர் சுப்பிரமணியம், உடையார்கட்டு குமாரசாமிப் புலவர் ஆகியோரிடம் திருவிளையாடற் புராணம், கந்தபுராணம், சிவராத்திரி புராணம், ஏகாதசி புராணம், பெரியபுராணம் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார்.

யாப்பிலக்கணத்திற்கு அமைய வெண்பா மற்றும் விருத்தப் பாக்களில் கவி வடிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ள இவர் கோவலன் கதை படிப்பிலும் ஈடுபடுடையவர். இவர் இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயம், திருவையாறு பிள்ளையார் கோவில், புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயம், கொழும்மு ஜிந்துப்பிட்டி முருகன் ஆலயம், கொம்பனித்தெரு கதிரேசன் கோவில், கனடா கந்தசுவாமி கோவில் ஆகிய ஆலயங்களில் புராண படனங்களை மேற்கொண்டுள்ளார். நூறுக்கு மேற்பட்ட திதி வெண்பாக்களைப் படைத்துக் கல்வெட்டு நூல்களைத் தொகுத்தளித்துள்ள இவர், பசுந்தரையான் என்ற புனைபெயரில் பல செய்யுள்களை வடித்துப்

பத்திரிகைகளில் பிரசுரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு 2013 ஆம் ஆண்டு இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலய நிர்வாகத்தினர் ‘வாதவூர் வாரிதி’ என்ற பட்டத்தினை வழங்கிக் கௌரவித்துள்ளதுடன், கண்டாவளை பிரதேச கலாசாரப் பேரவையினர் ‘கலை ஒளி’ விருதினையும் வழங்கிக் கௌரவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *