
கண்டாவளை பிரதேசத்தின் கோரக்கன்கட்டு கிராமத்தினைச் சேர்ந்தவரான யோ.தர்சன் 1988.12.16 ஆம் திகதி பிறந்தார். நாடகம், பட்டிமன்றம், கவிதை, கட்டுரை, ஓவியம், கூத்து, வில்லுப்பாட்டு மற்றும் அறிவிப்பு ஆகிய கலை இலக்கியத் துறைகளில் மாணவப் பருவத்திலிருந்து ஈடுபட்டு வருகின்றார். மாற்றத்தை நோக்கி, போதையற்ற உலகம், விடியலைத் தேடி, ஆண் பெண் சமத்துவம், தடுமாற்றம், பரிசு, தாழம்பூ, உள்ளங்கள் மலரட்டும், கலாலயம், மனமாற்றம் ஆகிய நாடகங்களில் இவர் நெறியாளராகவும், நடிகராகவும் பங்களித்துள்ளார். மேலும், பல்வேறு பட்டிமன்றங்கள், வில்லுப்பாட்டுகள், கவியரங்கங்கள் ஆகியவற்றில் மாவட்ட மட்டத்திலும் தேசியமட்டத்திலும் பங்குபற்றிப் பங்களிப்புகளை வழங்கியுள்ளார்.
இவருடைய சேவையைப் பாராட்டி 2013 ஆம் ஆண்டில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் ‘இளம் தலைவர்’ விருதும், 2019 கண்டாவளை பிரதேச கலாசாரப் பேரவையால் ‘இளம் கலைஞர்’ விருதும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கோரக்கன்கட்டு புத்தொளி கலைமன்றம், விளைபூமி இளைஞர் கழகம் ஆகிய அமைப்புகளில் இணைந்து செயற்பட்டுவரும் இவர், தர்மபுரம் மத்திய கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply