மடுமாதா ஆலயம், பல்லாய், பூநகரி

Posted on

by

klklk

பூநகரி பிரதேச செயலர் பிரிவின், வாடியடிப் பங்கின் துணை ஆலயமாக புனித மடுமாதா ஆலயம் பல்லாய் எனுமிடத்தில் அமைந்துள்ளது.

1980 களில் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளார் முழங்காவில், வலைப்பாடு பங்குத்தந்தையாகப் பணியாற்றிய காலத்தில் இவ்வாலயம் அமைக்கப்பட்டது. அவருக்கு முன்னர் பங்குத்தந்தையாக இஸ்பானிய நாட்டைச் சேர்ந்த அமல மரி தியாகிகள் சபையைச்சேர்ந்த அருட்தந்தை கொண்சால்வே அமதி அடிகளார் பல்லாய் பிரதேசத்தில் வசிக்கும் கத்தோலிக்க குடும்பங்களுக்காக பல்லாய் மடுமாதா ஆலயம் அமைக்க வேண்டிய முயற்சிகளை முன்னெடுத்துக் கொண்டு இருந்தார். ஆயினும் அப்போது அவர் புற்று நோய் மோசமடைந்ததால், தாம் முன்னெடுத்த ஆலய கட்டுமானப் பணிக்கு உரிய நிதியை பங்குத் தந்தையாக பொறுப்பெடுத்துக் கொண்ட அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதனிடம் கையளித்திருந்தார். அதைத்தொடர்ந்து இவ்வாலயம் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளாரால் தொடர்ந்து கட்டப்பட்டது.

மன்னார் மருதமடு அன்னையின் திருத்தலத்திற்குப் போக முடியாதவர்கள் , பல்லாய் மடு மாதா ஆலயத்தைத் தரிசிப்பதுண்டு.

1990களில் யாழ்ப்பாணப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இவ்வாலயம் அக்காலப் பகுதியில் பெரிதும் துணையாக இருந்திருக்கிறது.

உறுதி பூசுதல் முதலான அருட்சாதனங்கள் மற்றும் வழிபாடு, திருவிழா முதலானவை அக்காலப் பகுதியில் பெரும்எண்ணிக்கையான மக்களின் பங்குபெற்றுதலுடன் முன்னெடுக்கப்பட்டன.
உள்நாட்டு யுத்தங்களின் பின் 2017 இல் அருட்தந்தை யே.அ. அருள்தாசன் அடிகளார் பூநகரிப் பங்கின் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய காலத்தில் புனர்வாழ்வு அமைச்சினால் வழங்கப்பட்ட புனரமைப்பு நிதியில் அப்போது பூநகரிப் பகுதியின் 662 பிரிகேட் படை பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரியந்த ஜயவர்த்தன அவர்களுடைய பணிப்பின் பேரில் இலங்கை இராணுவ கட்டுமாணப் பணியாளர்கள் (மேசன்) மற்றும் ஆலய மக்களின் உடல் உழைப்பால் இவ் ஆலயமானது புனரமைக்கப்பட்டு, தற்போது 15 தொடக்கம் 20 வரையான கத்தோலிக்க குடும்பங்களின் வழிபாட்டுத்தலமாக இயங்கிவருகிறது.

இவ்வாலயத் திருவிழா ஆவணி மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *