
கிளிநொச்சி மாவட்டத்தில் A-9 பாதையின் முறுகண்டி வன்னேரிக்குள பாதையில் அக்கராயன்குள குடியேற்றத்திட்டம் 18 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது.இக்குடியேற்றத்திட்டமானது 1962 ஆம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் உள்ள சகல உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட காணியற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் மேட்டுக்காணியும் மூன்று ஏக்கர் வயல் காணியும்இ ஒரு பகுதியினருக்கு இரண்டு ஏக்கர் மேட்டுக்காணியும் இரண்டு ஏக்கர் வயல் காணியும் வழங்கப்பட்டு மக்கள் இப்பகுதியில் குடியிருந்து விவசாயம் செய்து வரும் ஒரு பிரதேசமாகும்.
ஸ்கந்தபுரம், கண்ணகைபுரம் ஆகிய இரு கிராமங்களையும் உள்ளடக்கி 200 ஏக்கர் விஸ்தீரணமுடைய கரும்பு செய்கை பண்ணி சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகின்ற கரும்புத்தோட்டத்தை ஊடறுத்து கண்ணகைபுரம் படித்த வாலிபர் திட்டத்திற்குச் செல்லும் முதலாம் வாய்க்காலில் முதலாம் இலக்க காணிக்கு முன்பாக அமைந்துள்ளது இக்கரும்புத்தோட்டப்பிள்ளையார் ஆகும்.
இவ்விடமானது கரும்புத்தோட்டத்தின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது. இக்கிராமம் குடியேற்றத்திட்டம் ஆகையால் கோவில்கள் இருக்கவில்லை. அப்போது இவ்வாலயம் அமைந்துள்ள இடம் காடாக இருந்ததினால் வீதி ஓரத்தின் அருகில் நின்ற பாலை மரத்தின் கீழ் முதலாம் இலக்கக் காணியின் சொந்தக்காரரான திரு. கணபதி தனுக்கோடி அவர்கள் இவ்விடத்தில் ஒரு கல்லை பிள்ளையாராக சிருஸ்டித்து விளக்கு வைத்து பொங்கல்இபூசைகள் செய்து வந்தார். இவருடன் இப்பகுதியில் குடியிருக்கும் விவசாயம் செய்யும் விவசாயிகளும் இப்பிள்ளையாரை வழிபட்டு வந்தனர்.
Leave a Reply