நாகபூசணி அம்மன் ஆலயம் – கோணாவில்

Posted on

by

மேற்படி ஆலயமானது 1964ஆம் ஆண்டு திரு.திருமதி கந்தையா செல்லம்மா தம்பதிகளால் தற்போது ஆலயம் அமைந்துள்ள காணியும் கினியா மற்றும் புளிய மரத்திற்கு கீழ் கருங்கல், வேல் என்பவற்றை வைத்து வழிபட்டு வந்தனர். இவ் ஆலயத்திற்கு முதலாவது பரிபாலன சபையினர் தங்கவேல்,பாலகிருஸ்னன், முருகையா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இவர்கள் எமது ஆலயத்தின் விசேட பூசையாக ஆனிஉத்தர வேள்வி திருவிழா, தீ மிதிப்பு என்பவற்றை விசேடமாக அனு~;டித்தனர். இவர்களது காலத்தில் யாழ்;ப்பாணத்திலிருந்து ஸ்ரீ நாகபூசனி அம்மன் கருங்கல் உருவச்சிலை முதலாவதாக வைக்கப்பட்டது. பின்னர் வி.தங்கையா, சி.வேலு, வெ.துரைராசா ஆகியோரின் காலத்தில் திரு சி.சுப்பையா என்வரின் உதவியுடன் எமது ஆலயம் யாழ்ப்பாணம் கச்சேரியின் கீழ் பதிவு செய்யப்பட்டது.

1989 ஆம் ஆண்டு ஆலயம் பதிவு செய்வதற்காக நிர்வாகத்தினர் கந்தையா என்பவருக்கு செந்தமான காணியினை ரூபாய் 2500 கொடுத்து ஆலயத்திற்கு சொந்தமான காணியாக கொள்வனவு செய்யப்பட்டது. 1990 ஆம் ஆண்டு வரை ஆலயம் ஊர் மக்கள் விளக்கு வைத்து பூசை செய்து வந்தனர். பின்னர் நிரந்தர பூசகர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.

இவ்வாலயம் பல வருடமாக புனரமைக்க முற்பட்ட போதும் ஆலயத்தினை கட்டுவதில் தடங்கல்கள் ஏற்பட்டு அத்திவார மட்டத்திலேயே வேலை நிறுத்தப்பட்டு பின்னர் 2014 ஆம் ஆண்டு போ.தில்லைவேல், ப.விஜயகுமார், அ.சிவகுமார் என்பவரின் காலத்தில் ஆலயம் முழுமையாக நிறுவப்பட்டு ஆகம பிரிவுகளுக்கு அமைவாக பரிபாலங்கள் அமைக்கப்பட்டு 03.04.2014 முதல் முதலாக இயந்திரம் வைத்து கும்பாவிசே~ம் நடைபெற்றது இன்றும் ஆனிஉத்தர வேள்வித்திருவிழா, 10 நாட்கள் அலங்கார உற்சவ திருவிழா ஏனைய விN~ட நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *