ஜெயதுர்க்கை அம்மன் ஆலயம் -ஆனந்தபுரம்

Posted on

by

மேற்படி ஆலயமானது 1980 ஆண்டு ஒரு மூதாட்டியினால் ஒரு குடில் அமைத்து வழிப்படப் பெற்று வந்தது. பின்னர் மக்களினால் பஜனைகள் பூசைகள் என்பன நடாத்தப்பெற்று வளர்ச்சி கண்டது. அதன் பின்னர் 1987ம் ஆண்டு அடியார்களினால் அதற்கென சிறு ஆலயம் அமைக்கப்பட்டு ஜயர் ஒருவரை பூசைக்கமர்த்தி விசேட பூசைகள் வழிபாட்டுடன் நடைபெற்று வந்தது. தற்போது அது புதிய ஆலயம் அமைப்பதற்காக பாலஸ்தாபனம் செய்யப்பெற்றுள்ளது.

இவ்வாலயத்திற்கு சொந்தமாக காணி இல்லாததினால் தற்போது அயலிலுள்ளவர்கள் இவ்வாலயத்திற்கு தமது காணியில் ஒரு பகுதி நன்கொடையாக வழங்கியிருப்பதனால்இ ஆகம விதிக்கமைய அமைக்கப்பட்டிருக்கின்றது. வடக்கு நோக்கி அமைந்திருக்கும் திருவருள்மிகு ஜெயதுர்க்கை அம்மன் தன்னை தஞ்சமென வந்து மெய் அன்புடன் வணங்குகின்ற பக்த அடியார்களுகடகெல்லாம் வெற்றியோடு நல்லருள் புரிந்து வருகிறாள். இவ்வாலயம் புகழோடு விளங்குகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *