1985 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு சிறிய குட் பூசாரியினால் பூசை செய்யப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் மக்களின் பங்களிப்புடன் 1997ஆம் ஆண்டு புதிய புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டப்பட்டு ஸ்ரீ ஈசன் குருக்கள் அவர்களால் கும்பாபிகம் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து 10 நாட்கள் கும்பாபிக திருவிழாக்கள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து பூசைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதன் பின் 12 வருடங்களிற்குப்பின் அரசாங்கத்தின் பங்களிப்புடன் மூலத்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், தம்ப மண்டபம், உட்படமணிக்கூட்டு கோபுரம், மற்றும் மஹாலட்சுமி முருகன். நவக்கிரகம், சண்டேஸ்வரர், வைரவர் ஆகிய பரிபாலன மூர்த்திகள் புனர்நிர்மானம் செய்யப்பட்டது.2022.09.18 மஹாகும்பாபிகம் ஆரம்பிக்கப்பட்டு ஸ்ரீ ஜெயந்தன் குருக்கள் தலைமையில் 10 நாட்கள் அலங்கார உற்சவம் சிறப்பாக நடைபெற்று வந்தது.
தொடர்ந்து நித்திய பூசைகள்களை பூசகர் திருக்குமரன் ஜயா செய்து வருகிறார் தொடர்ந்து நடைபெறும் நவராத்திரி, சிவராத்திரி, அலங்கார உற்சவம் தைபொங்கல், தைபூசம், கௌரிகாப்பு, பிள்ளையார் பெருங்கதை, பிரதோச விரதம், விநாயகர் சதுர்த்தி, அமாவாசை, பௌர்ணமி விரதம், நவக்கிரக வழிபாடு என இன்று வரை மிக சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
Leave a Reply