
தேவையான பொருட்கள்:-
கத்தரிக்காய் 250 கிராம்
நற்சீரகம் ½ மேசைக்கரண்டி
கொத்தமல்லி ½ மேசைக்கரண்டி
மஞ்சள் சிறிய துண்டு
வேர்க்கொம்பு (சுக்கு) சிறிய துண்டு
மிளகு 6
வெள்ளைப்பூடு 6 பல்லு
உப்பு அளவாக
நீர் 2 தம்ளர்
செய்முறை:-
சீரகம், மஞ்சள், இஞ்சி , வேர்க்கொம்பு, மிளகு இவற்றை நன்கு பசுந்தாக அரைத்து இரண்டு பல்லு வெள்ளைப் பூடையும் சேர்த்து அரைத்துத் திரணையாக்கவும்.
அரைத்த கூட்டை நீரிலிட்டு உப்பும் சேர்த்துக் கரைத்து மிகுதி வெள்ளைப்பூடையும் சேர்த்துக் கொதிக்க வைத்து வற்றமுன் இறக்கிக் கொள்ளவும்.

Leave a Reply