கிளிநொச்சி மாவட்டம்

இலங்கையின் வடமாகாணத்தில் அமைந்துள்ள கிளிநொச்சி மாவட்டம், புவியியல் மற்றும் நிர்வாக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாவட்டமாகும். தீவின் வட பகுதியிலுள்ள இம்மாவட்டம் 1984ஆம் ஆண்டு 25 வது மாவட்டமாக உருவாக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டம் பொதுவாக சமத்தள நிலப்பரப்பைக் கொண்டது மற்றும் குறைந்த உயரமுள்ள உலர் வலயத்தில் அடங்குகிறது. இம்மாவட்டம் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன கரைச்சி, கண்டாவளை, பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி என்பனவாகும்.

இம்மாவட்டத்தில் மொத்தம் 95 கிராம நிலைத்தலைவர் பிரிவுகள் (GN divisions) உள்ளன அவற்றுள் கரைச்சி-42 ,கண்டாவளை-16, பூநகரி-19, பச்சிலைப்பள்ளி-18

இந்தப் பிரதேச செயலாளர் பிரிவுகளின் பரப்பளவுகள்:-

கரைச்சி – 410.96 சதுர கிலோமீட்டர்

கந்தாவளை – 209.70 சதுர கிலோமீட்டர்

பச்சிலைப்பள்ளி – 167.70 சதுர கிலோமீட்டர்

பூநகரி – 448.75 சதுர கிலோமீட்டர்

மாவட்டத்தில் மூன்று உள்ளூராட்சி நிர்வாக அமைப்புகள் உள்ளன:-

கரைச்சி பிரதேச சபை

பூநகரி பிரதேச சபை

பச்சிலைப்பள்ளி பிரதேச சபை

இம்மாவட்டம் தீவின் உலர் மண்டல (Dry Zone) பருவநிலைப் பிரிவிற்குள் அடங்குகிறது. வருடாந்த மழைப்பொழிவின் சராசரி அளவு சுமார் 1520.57 மில்லி மீட்டர் ஆகும்.

மாவட்டத்தில் மழையின் சுமார் 75% பகுதி வடகிழக்கு பருவமழை காலத்தில் (செப்டம்பர் முதல் டிசம்பர் வரை) பெறப்படுகிறது. ஆண்டின் மீதமுள்ள காலப்பகுதி பொதுவாக உலர்ந்ததாக இருக்கிறது, அதில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மிகவும் உலர்ந்த காலமாகும்.

மாதந்தோறும் சராசரி வெப்பநிலை 25°C முதல் 30°C வரை காணப்படுகிறது.