துர்க்கை அம்மன் ஆலயம் (1/4 ஏக்கர் திட்டம் பாரதிபுரம்)

Posted on

by

1983 மு; ஆண்டு தென் இலங்கையில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை யொட்டி இடம் பெயர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தில் 1Æ4 ஏக்கர் திட்டம் பாரதிபுரம் பகுதியில் அப்போதே பாரதிபுரம் அரச காடுகளை வெட்டி 300 ற்கு மேற்பட்ட குடும்பங்கள் குடியேறினர்.
குடியேறிய மக்கள் நோயினால் பெரும் துன்பத்தை அனுபவிக்க நேரிட்டது இதன் போது இத்துன்பத்தில் விடுபட இம்மக்கள் ஒன்றுசேர்ந்து அயல்கிராம மக்களையும் இணைத்துக் கொண்டு 1985ம் ஆண்டு கோயில் ஒன்றை அமைத்தனர் பக்தர்கள் இத் தெய்வத்தை வழிபட்டு வந்தனர் 1992ம் அண்டு கிராம அலுவலராக கடமையாற்றிய திரு பொ.யோகேந்திரன் ஜயாவின் முயற்சியில் குருகுலம் சுவாமி கணேசநந்தா அவர்களின் அனுசரனையுடன் மற்றும் கிராம மக்கள் அயல் கிராம மக்களின் ஆதரவுடன் கிரியை கோயிலாக மாற்றப்பட்டது.
1996ம் ஆண்டு நாட்டில் இடம் பெற்ற அசம்பாவிம் காரணமாக மக்கள் இடம் பெயரவே ஆலயம் சேதமாக்கப்பட்டது. 2000ம் ஆண்டு மீள்குடியேறிய மக்கள் ஆலயத்தை புனரமைத்து வழிபாடு செய்து வந்தனர் 2009ம் ஆண்டு ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக மக்கள் இடம் பெயர்ந்த போது ஆலயம் முற்றாக அழிவுற்றது தற்போது மக்கள் ஒத்துழைப்புடன் ஆலயத்தினை புனரமைப்பு செய்து சிறப்பாக இயங்கி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *