அருள்மிகு வன்னேரி முருகன் தேவஸ்தானம் (வன்னேரிக்குளம்)

Posted on

by

வன்னேரிக்குளம் கிராமம் உருவாக்கப்பட்டு மக்கள் குடியேற்றம் செய்யப்பட்ட பின் 1960ம் ஆண்டளவில் சின்னத்தம்பி என அழைக்கப்படும் ஒரு முதியவரால் வன்னோரிக்குளத்தில் இருந்து ஒரு டு வடிவிலான கல் ஒன்று எடுக்கப்பட்டு அந்தக்கல்லினை அவர் முருகப்பொருமானை நினைத்து தற்போதுய முருகனாலய வளவில் உள்ள ஒரு நாவல் மரத்தடியில் வைத்து அதற்கு ஓலையால் கொட்டில் அமைத்து வழிபட்டு வந்தார். அப்போது அந்த நாவல் மரத்தடியின் கீழ் சிறுவர்கள் நின்று விளையாடுவது போல் தோற்றமளிப்பதாகவும் அவ்விடத்தை சேர்ந்து பார்த்தால் அங்கு யாரையும் காணமுடியாது எனவும் முனனோர் கூறுவர். அதன்பின் இவ்வாலயம் சிறிதாக அமைக்கப்பட்டு திரு.ஆறுமுகம், திருமதி.வி.செங்கமலம், திரு.எஸ்.தியாதையர், திரு.சு.குமாரசாமிஜயர், திரு.க. செல்லத்துரை, திரு.எஸ்.விஸ்வநாதன், ஆகியோரால் தொடர்ந்து பூசைகள் செய்யப்பட்டு வந்தது. இக்காலத்திலே ஆலயத்தின் பரிபாலன சபையும் உருவாக்கப்பட்டது.
1994ம் ஆண்டு ஆண்டளவில் இவ்வாலயம் மக்களின் ஒத்துழைப்புடன் கல்லினால் அமைக்கப்பட்டு மூலஸ்தானம் அமைத்து கோவில் கட்டப்பட்டு சுற்றி சர பிள்ளையார், வைரவர் நவக்கிரக மூர்த்திகள் அமைக்கப்பட்டு திரு ஜெகதீஸ்வரசர்மா அவர்களால் கும்பாபிக்ஷேகம் செய்து வைக்கப்பட்டது. பிரதானவீதியில் அருகெ இவ்வாலயம் அமைந்துள்ளமையால் வீதியால் செல்லும் மக்கள் அன்றாடம் வழிபாடு செய்யப்பட்டு வருகின்றது வருடந்தோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *