
கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு பழமையான ஆலயமாக திகழும் “ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயம்” நீண்ட வரலாற்றை கொணடடிருந்த போதும் ஒரு முறைப்படுத்தப்பட்ட வராலாற்றுக்சுவடி காணப்படவில்லை. இந்நிலைகளில் பலநூல்களிலும் அக்காலத்தில் வாழ்ந்தவர்களின் வாய்மொழி மூலம் காணப்படும் தகவல்களைக் கொண்டு இவ்வராலாற்று ஆவணம் உருவாக்கப்படுகின்றது.
கணேசபுரம், உருத்திரபுரம், ஜெயந்திநகர் ஆகிய கிராமங்களில் ஆரம்ப காாலத்தில் யாழ் மாவட்டத்திலிருந்து மக்களை அழைத்து வந்;து குடியேற்றுகின்ற போது கிறிஸ்தவ அமைப்புக்கள் தீவிர பிரசாரம் செய்து மதம் மாற்றத்தை, குடியேற்ற மக்களிடம் ஏற்படுத்துவதை அறிந்த நீர்பாசன பொறியியலாளராக கடமையாற்றிய யோகர் சுவாமிகள் அவர்களின் வேண்டுகோளை ஏற்று சைவசமயத்தை வளர்;த்து பாதுகாக்க இங்கு வருகை தந்த வடிவேல் சுவாமிகள் ( ஜெயந்தி நகர் மகாதேவ ஆச்சிரமத்தின் முதலாவது சுவாமிகள்) அவர்களும், தனது சொந்த நிலத்தை மகாதேவா ஆச்சிரமத்தை உருவாக்க உவந்தளித்த திரு நல்லதம்பி அவர்களும், ரங்கூன் சுப்பிரமணிம் அவர்களும் நீர்பாசன பொறியியலாளராக கடமையாற்றி வந்த திரு சிவசுந்தரம் அவர்களும் ஜெயந்தி நகரில் சைவ சிறுவர் இல்லமாக குருகுலத்தை அமைத்து சைவ பாரம்பரியத்தையும் விழுமியங்களையும், தமிழையுமு; வளர்த்த பெரியாரான “அப்புஜூ” என எல்லோராலும் அழைத்த திரு வே. கதிரவேலு அவர்களும் சோமு ஐயர், அவருடைய சகோதரி ( அப்பக்கார ஆச்சி), இவர்களுடன் இணைந்து திரு மா.சேது பாண்டியன், திரு. செ.நடராசா (ஆசிரியர்) ஆகியோர் சைவ சமய ஆசாரங்களைப் பேணக்கூடிய ஓர் சைவ ஆலயத்தை உருவாக்க ஜெயந்தி நகர் கிராமத்தின் மத்தியில் வேப்பமரங்கள் சூழ்ந்த பகுதியிலே வீரமரம் நின்ற இடத்தில் 1953ம் ஆண்டு திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரின் குருபூசை தினமான வைகாசி மூல நன்நாளில் “கல்லும், வைரவ சூலமும் வைத்து” ஓர் சைவ ஆலயம் அப்பெரியோர்களினால் ஆரம்பிக்கப்பட்டது. இன்றுவரை அந்த வீரமரமும் அன்று வைக்கப்பட்ட அதே கல்லும், வைரவ சூலமும் அவ்வாறே காட்சியளிக்கின்றது.
மேலும் வடிவேல் சுவாமிகள், அப்புஜூ, மா.சேது பாண்டியன், திரு. செ.நடராசா, திரு த. நல்லதம்பி, செல்வி வல்லிபுரம் இராசம்மா(ஆசிரியர்), சோமு ஐயர் இவ்வாறு பலர் இணைந்து இவ் ஆலயத்தை சிறிய அளவிலான திருப்பணிவேலைகளை 1963ம் ஆண்டில் ஆரம்பிப்பதற்காக முயற்சிசெய்த போது “ மூலமூர்த்தி” தொடர்பான கவனம் எல்லோராலும் ஈர்க்கப்பட்டு ஒவ்வொருவரும் தங்களது இஸ்ட தெய்வங்களை திருவுளசீட்டில் எழுதி வைத்தனர். தற்போது பிரித்தானிய நாட்டில் வசிக்கும் பாலசுந்தரம் திருஞானசம்பந்தன் சிறுவனாக ஆலய சுற்றாடலில் விளையாடிக்கொண்டிருக்கும் போது அச்சிறுவனை அழைத்து போடப்படுள்ள திருவுளசீட்டில் ஒன்றை எடுக்குமாறு கூறப்பட்டது. அச்சிறுவனும் திருவுளச்சீட்டு ஒன்றை எடுத்து கொடுத்தார். அதில் திரு மா.சேது பாண்டியர் எழுதிய “ மீனாட்சி அம்மன்” என்ற பெயரல் காணப்பட்டதனால் அன்றைய தினம் வருகை தந்த எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அன்று தொடக்கம்” ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயம்” என்னும் பெயரில் இவ் ஆலயம் அமையப்பெற்று அலங்கார திருவிழாவாக நடைபெறுவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Leave a Reply