பர்வதவர்தத்தின் அம்மன் ஆலயம் (அம்பாள்குளம்)

Posted on

by

ஆனந்தநகரில் அமைந்திருக்கும் இக்கோயிலானது ப ல நூற்றாண்டுகளுக்கு முந்தியதாக இருக்க வேண்டும் இதில் ஒரு செங்கல்லால் கட்டப்பட்ட ஒரு கிணறு உள்ளது. அதனருகே பெரியதோர் பாலைமரமும் இருப்பதை நாம் காணக்கூடியதாகவுள்ளது . இதை கோட்டைகட்டி அம்பாள் என கூறுவார்கள்.
இவ்விடத்தில் 1952ம் ஆண்டுகளில் காட்டிற்கு வேட்டைக்கு வருபவர்கள் இக் கிணற்றுநீரைக் குடித்துள்ளனர் வேட்டைக்குப் வருபவர்கள் இக் கிணற்றுநீரைக் குடித்துள்ளனர். வேட்டைக்குப் போகமுன் பாலைமரத்தடியில் கற்பூரம் கொழுத்தி கும்பிட்டபின் வேட்டையாடச் சென்னு வரும் போது இக்கோயில் இருந்ததாகவும், அதில் அவ்வழி செல்பவவர்கள் வணங்கியதாகவும் கூறுகின்றனர். 1972ம் ஆம் ஆண்டளவில் இப்பகுதியில் மக்கள் குடியேற்றப்பட்னர். அப்போது தொடக்கம் இக்கோயிலில் மக்கள் வெள்ளி, செவ்வாய்களில் விளக்கேற்றி விசேட தினங்களில் பொங்கல் வைத்து படைத்து வந்துள்ளனர் அப்பகுதியிவாழ் மக்களால் கொட்டில் அமைக்கப்பட்டு வணக்கத்திற்குரிய இடமாக நேர்த்திகள் வைத்து கற்சிலை வைத்து பொங்கி வந்தனர்.
1977ம் ஆண்டு தொடக்கம் கனகபுரத்தில் வாழ்ந்த தாடியார் என அழைக்கப்படும் திரு கணேந்திம் அவர்கள் மக்களிடம் பணம் வசூத்து முலஸ்தானத்தை 1995இல் அமைத்தார் ஆனால் அது முற்றுப்பொறவில்லை கனகபுரத்தில் உள்ள சிலரும் இக்கோயிலுக்கு வந்த விசேட தினங்களுக்கு பொங்கி படைத்து வந்தனர்.
2000 ஆண்டு மீண்டும் வந்த திரு பத்மநாதன் அவர்களின் தலைமையில் பணம் சேர்த்து திரு பரமகுரு திரு குழந்தைவேல், திரு பெருமாள், திரு பரதராமன், திரு ஜயாசாமி, அகியோரால் கொட்டில் அமைக்கப்பட்டு மண்சுவர் அமைக்கப்பட்டது. பொருமான் என்பவர் பூசகராக இருந்தார். 2002ம் ஆண்டு ஒரு நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு கோயிலில் சிரமதானங்கள் இடம் பெற்று திருத்த வேலைகள் என்பன நடைபெற்றன.
அதன்பின் 2004ம் ஆண்டு புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டது. கட்டப்பட்ட கோயில் பிழை என ஜயர் கூறியதால் புதிதாக கட்டடம் அமைக்க சபை தீர்மானித்து புதிய மூலஸ்தானம் அமைக்கப்பட்டது அதில் முன் மண்டபமும் ஓடுகளினால் செய்யப்பட்டது அதற்கான பணத்தினை மக்களிடமும் நிர்வாகத்திடமும் பெற்று ஆலயம் அமைக்கப்பட்டது. 2008ம் ஆண்டு இடம்பெயர்வில் அமைத்து இல்லாமல் ஆபாயிவிட்டன. மீண்டும் 2011இல் நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு ஆலயம் அமைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *