சர்வேஷ்வரன் வில்வரசன்இ (1998.04.02 -)

Posted on

by

கண்டாவளைஇ பிரமந்தனாறு கிராமத்தைச் சேர்ந்த கவிஞர்இ பேச்சாளர்இ இலக்கிய விமர்சகர்.

இவர் பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும்இ கிளிநொச்சி இந்து கல்லூரியில் இடைநிலை மற்றும் உயர் கல்வியையும் கற்றதோடு பேராதனை பல்கலைக் கழகத்தில் தமிழ்ச் சிறப்பு இளங்கலைஇ முதுகலை பட்டங்களை பூர்த்தி செய்துள்ள இவர்இ பேராதனை பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறையில் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றி வருகின்றார்.

பாடசாலை மற்றும் பல்கலைக்கழக விவாத அணிகளின் தலைமை பேச்சாளராகவும் செயற்பட்டார். 2019ஆம் ஆண்டு பேராதனை தமிழ் சங்கத்தில் கலைப் பீட பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்ட இவர் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பேசு தமிழா பேசு சர்வதேச பேச்சுப் போட்டியில் 3ம் இடத்தைப் பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்தார். 2018ஆம் ஆண்டு கம்பன் கழக பேச்சுப் போட்டியில் வெண்கல பதக்கத்தைப் பெற்று கொண்டார். 2019ஆம் ஆண்டு பேராதனை தமிழ் சங்க மாதரே கவிதை போட்டியில் தங்க பதக்கம் பெற்றார். 2023 ஆம் ஆண்டு பசி உறுநிலம் எனும் பெயரில் தனது முதலாவது கவிதை தொகுதியை வெளிக்கொணர்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *