
கிளிநொச்சி பாரதிபுரம் கிராமத்தில் 1977ஆம் ஆண்டு பாரதிபுரம் கிராமமானது மக்கள் குடியேற்றம் செய்யப்பட்டது. மக்கள் குடியேறிய பொழுது ஆலயம் அமைப்பதற்கென காடுகளும் பற்றைகளும் அழிக்கப்பட்டு ஆலயத்திற்கென சிறிய காணித்துண்டு ஒதுக்கப்பட்டது. அந்த காணித் துண்டில் ஒரு மரத்தின் கீழ் சிறு கல்லை வைத்து மக்களால் ஆலய வழிபாடு தொடங்கியது.
பின்னர் மரத்தின் கீழ் அமைந்திருந்த ஆலயமானது சிறு 1994 ம் குடிசை அமைக்கப்பட்டு அதனுள் சிறு சிலையை வைத்து வழிபடத் தொடங்கினார்கள். பின்னர் 1994 ம் ஆண்டே சிறு மூலஸ்தானம் அமைத்து தொழுது வந்தார்கள் அதற்காக மக்களினால் தங்களில் ஒருவரை ஆலய கர்த்தாவாக ஒருவரை நிஜமித்து இருந்தார்.
தொடர்ந்து 1966ம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டின் பிரச்சினை காரணமாக இடம்பெயர்வு ஏற்பட்டது. பின்னர் தொடர்ந்து 2000 ஆண்டு மீண்டும் கிராமத்திற்கு வருகை தந்த பொழுது ஆலயத்தின் தடம் கூட காணாமற் போயிருந்தது. பின்னர் மக்களால் சிரமதான பணிகளை மேற்கொண்டு ஆலயத்தின் சிலைகளை கண்டெடுத்தனர்.
பின்னர் மீண்டும் முன்னைய மாதிரி நிறுவப்பட்டு ஆலய வழிபாடு தொடங்கியது. பின்னர் தொடர்ந்தும் 2008 ஆம் ஆண்டு இறுதி காலப்பகுதியில் மீண்டும் ஓர் இடம்பெயர்வு ஏற்பட்டது. பின்னர் 2010 ம் ஆண்டு இறுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டார்கள்.
பின்னர் 2010ம் ஆண்டு ஆலயத்தின் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு கும்பாபிக்ஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வருடாந்த திருவிழா செய்யப்பட்டும் தொடர்ந்து ஆலயத்திற்கென பூசகர் ஒருவரை நியமித்து மாலை பூசைகள் நடைபெற்று வருகின்றது. இவ்வாறு மீண்டும் புனரமைப்பு வேலைகள் நடைபெற்று 2025ம் ஆண்டு சிறப்பாக பூசை விழாக்கள் நடைபெற்று வருகின்றது.

Leave a Reply