திருக்குழல் நன்மாதுமை சமேத கணபதீஸ்வரர் சிவன் ஆலய வரலாறு (மயவனூர், வட்டக்கச்சி)

Posted on

by

நாடும் நகரமும் நற்திருக்கோயிலும் தேடித் திரிந்து சிவபெருமான் என பாடுமின் பாடிப் பணிந்த பின் கூடிய நெஞ்சத்துக் கோயில் கொண்டானே என்பது திருமூலர் தந்த திருமந்திர மாலை ஆகவே நாடு நகரம் ஊர்கள் இவற்றிற்கு நடுவே சிவாலயம் இருக்க வேண்டியது இன்றியமையாச் சிறப்புடையதாகும். சிவன்கோயில் இல்லாத ஊர் சுடுகாடு போன்றதாகும். என்றும் திருக்கோயில் இல்லாத திருவிலூரும் அவை எல்லாம் ஊரல்ல அட விகாடே என்று தோத்திரங்களும் சாஸ்திரங்களும் கூறுகின்றன. இந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் கீழ்ப்பால் விளங்கு வளர் சிறந்தோங்கும் வட்டக்கச்சி பகுதியில் சிவாலயம் இல்லையே என்ற குறை தீர மாயவனூரில் எம்பரம் கோயில் கொண்ட வரலாறு ஓர் புதுமையாகும்.
1957ம் ஆண்டுப் பகுதியில் வட்டக்கச்சி பெரிய வில்லுக்குளத்திற்கு அப்பால் அடர்ந்த காடாக இருந்த நிலத்தை நலிவுற்ற சில மக்கள் சென்று வெட்டித்திருத்திக் குடியேறினர். பெரிய வில்லுக் குளத்துக்கு அருகாமையில் ஸ்ரீரங்கநாதன் கோயில் கொண்டிருந்தமையால் தாம் குடியேறிய ஊருக்கு மாயவனூர் என்றே கிருக்ஷ்ண பரமாத்மாவின் நினைவாகக் பெயர் சூட்டி வசித்து வந்தார்கள். கோயில் இல்லாத ஊரில் குடியிருத்தலாகாது என்றபடி தங்கள் ஊர் மத்தியில் ஓர் திருக்கோயில் இல்லையே என்ற குறையைப் போக்க வேண்டுமென்று சிந்தித்ததன் விளைவாக எக்காரியத்திற்கும் முன் நிற்பவரும் முன்னரே வேண்டுதல் செய்யும் தெய்வமும் விக்கினகங்களை தீர்ப்பவருமான விநாயகப் பெருமானையே வைத்து வணங்குவோம். என்று தீர்மானித்தனர். ஊர் மத்தியில் நின்ற பெரிய ஆலமரத்தடியில் பிள்ளையாரை வைத்து வணங்கி வந்தனர். அக் காலத்தில் இவ்வாலயம் காட்டுப்பிள்ளையார் என்றே வழங்கப்பட்டு வந்தது. எம்பெருமான் திருவருளால் பல மக்களும் இவ்வூரை நாடி வந்து காடு திருத்திக் களனியாக்கிக் குடியேறினர்.ஊரம் மக்களும் பல்வகைச் செல்வமும் மல்கி வாழ்வதற்கு விநாயகப் பெருமான் திருவருள் புரிந்தார்.
1985 இல் கிளிநொச்சி பகுதிக்கு வருகை தந்த சைவப் பெரியார் ஆத்ம ஜோதி, நா.முத்தையா ஆசிரியர் அவர்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று சைவச் சொற் பொழிவு செய்து வந்தார்கள். ஒரு தினம் மாயவனூரில் கோயில் கொண்ட விநாயகர் ஆலயத்திற்கும் வருகை தந்து பிரச்சாரம் செய்யும் போது இவ்வூர்ப்பகுதியில் எல்லாத்தெய்வங்களுக்கம் ஆலயம் இருக்கின்றது சிவாலயம் இல்லையேல் என்ற குறைபாட்டையும் சிவன்கோயிலின் மகத்துவம் பற்றியும் பேசினார். மேலும் இவ்வாலயச் சூழலையும் உற்று நோக்கிய போது இது ஒரு சிவாலயமாக வர வேண்டிய அமைப்ப இருக்கின்றது என்றும் கூறிப்போந்தார்கள். ஜயா அவர்களது வாக்கு பலித்தால் போல் அடுத்த ஆண்டுக்கு இடையிலேயே திரு.சி.இராசரத்தினம் ஆசிரியர்கள் அவர்களது முயற்சியால் அவரது செலவிலேயே ஓர் சிவலிங்க மூர்த்தியும் விநாயகர், வேல் ஆகிய பரிவாரமூர்த்திகளையும் ஒரே மூலஸ்தானத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டது. முன்னர் கணபதி ஆலயமாக இருந்தமையால் கணபதியை முன்வைத்து கணபதீஸ்வரம் என்றே பெயர் சூட்டி வழிபட்டு வந்தார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *