சித்தி விநாயகர் ஆலயம் (சிவிக்சென்ரர்)

Posted on

by

இந்து மத கடல்நடுவே முத்தென விளங்கும் ஈழநாட்டின் வட பால் அமைந்த இரணைமடு வாவிசூழ் வளம்நிறைந்த கிளிநொச்சி மாநகரில் நெல்,தென்னை, மா, பலா முதலிய வளங்களை தன்னகத்தே கொண்ட வட்டக்கச்சி கிராம நுழைவாயில் விவசாய பண்ணை அருகில் சித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது.
வரலாறு பற்றி நோக்கும் போது 1937, 1944 ஆண்டளவில் அங்கு விவசாயப் பண்ணையில் கடமையாற்றிய ஊழியரின் காலில் வயல் வேலை செய்யும் போது காயம் ஏற்பட்டது அன்றிரவு அவரது கனவில் அவ்விடத்தில் ஒரு பிள்ளையார் இருப்பதாகவும் அதை வணங்கினால் காலுக்கு நிவாரணம் கிடைக்குமென்று காட்சி கிடைத்ததால் அவ் இடத்தில் ஒருஉருவம் வைத்து வழிபட்டனர்.
நாளடைவில் ஆற்றங்கரையில் வெள்ளம் மூடி பாயத் தொடங்கியதால் அரச விவசாயப் பண்ணையில் பயின்றவர்கள் அவ் இடத்திலிருந்து முன்புறமாக நகர்த்தி 5 ஏக்கர் அளவிலான காணியையும் ஆலயத்திற்கு வழங்கி ஆலமரத்தின் கீழ் சிறு கோவில் கட்டி தினம் பூசைகள் நடத்தினர். காலப்போக்கில் இடைக்காட்டைச் சேர்ந்த சித்தரம்மான் என்று அழைக்கப்பட்ட சிற்றம்பலம் என்பவர் தனது மகன் பாலசிங்கத்திடன் சிவிக் சென்ரரில் வசித்து பூசைகள் செய்து வந்தார். அக்காலத்தில் இங்கு குடியேறிய மக்களும் பூசைகள் செய்ததாக மூதாதயர்கள் மூலம் அறியக்கூடியதாக இருந்தது.
1978 இக் கோயிலை தற்போது அமைந்துள்ள இடத்தில் அத்திவாரமிட்டு கட்டி 1988 இல் கும்பாபிசேகம் செய்து நித்திய பூசை விசேட பூசை ஆவணி மாதத்தில் அலங்காரத்திருவிழாவும் நடைபெற்று வந்நது. 1997 இல் போர்ச் சூழல் காரணமாக இடம் இடம் பெயர்வின் பின் ஆலயம் புணரமைக்கப்பட்டு 2002 இல் வன்னியில் முதன் முதலாக கும்பாபிசேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 2014 ஆம் ஆண்டு வசந்தமண்டபம் புணரமைக்கப்பட்டு பரிவார மூர்த்திகள் ஸ்தாபிக்கப்பட்டு கும்பாபிசேகம் நடந்து பூசைகளும் அலங்காரத்திருவிழாவும் நடந்தன. 2002 ஆம் ஆண்டில் இருந்து ஆவணி மாத அலங்காரத்திருவிழா கொடியேற்றத்திருவிழாவாகவும் தேர்த்திருவிழாவாகவும் நடைபெற்றுக்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
“வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்துவரும்” என்ற வகையில் சித்தி விநாயகபட பெருமான் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *