
1984ம் ஆண்டு கிளிநொச்சி காந்திக்கிராமம் எனும் கிராமம் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கு குடியேறிய இந்து மக்களால் வழிபாட்டிற்கும் நற்சிந்தனை ஒழுக்கத்திற்காகவும் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயமானது 1985ஆண்டு ஆவணி மாதம் 24ம் நாளான்று அமைக்கப் பெற்றது. ஆரம்ப காலத்தில் சமஸ்கிருதம் சாராத முறையில் பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது ஆலய பூசகராக திரு. சின்னத்ததம்பி இராமசந்திரன் மூன்று வருடங்கள் பூஜைகள் மேற்கொண்டார். பின்னர் 1988 ஆண்டு ஆலய பூஜைகள் சமஸகிருத முறைப்படி மாற்றப்பட்டது அத்துடன் பரிபாலன சபையும் அமைக்கப்பெற்றதோடு முதலாவது ஆலய பூசகராக உருத்திரபுரத்ததை சோர்ந்த திரு சிவ ஸ்ரீ இராமசந்திர சர்மா அவர்கள் ஆலய பூசைகளை ஆமற் கொண்டார்.
இவ்வாலயம் மண்ணால் கட்டப்பட்டு 1990ஆண்டு சித்திரை மாதம் 15ம் நாளான்று பிரதிஸ்டை செய்யப்பட்டு கும்பாபஜசேகமும் மேற்கொள்ளப்பட்டுத. தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெற்றது. இவ்வாலய 8ம் திருவிழா வேட்டை திருவிழாவாகும் இத் திருவிழா ஊற்றுப்புலம் முருகன் ஆலயத்திலே நடைபெறுகின்றது. 10ம் நாள் தீர்த்த திருவிழா அம்பாளை ஊர்வலமாக கொண்டு சென்று புதுமுறிப்பு குளத்தில் தீர்த்தம் ஆடப்பட்டு வருகின்றது. நாட்டில் ஏற்பட்ட போர்ச்சுழல் முடிவுற்ற பின் மீள்குடியேற்றம் நடைபெற்ற பின்பே 2000 ஆண்டு மீளவும் கும்பாபிசேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 2008 ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக மக்கள் இடம் பெயர்வு ஏற்பட்டதன் பின் ஏழுந்தருளிகள் புளியம் பொக்கனை ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தில் வைக்கப்பட்டது மீண்டும் 2010 மீள் குடியேற்றத்தின் பின் மீண்டும் ஆலயத்தில் கொண்டு வரப்பட்டு பூசைகள் நடைபெற்று தற்போது சிறப்பாக இயங்கி வருகின்றது.

Leave a Reply