அருள்மிகு ஆலடி முருகன் ஆலயம் (உற்றுப்புலம்)

Posted on

by

2002ம் ஆண்டு பங்குனி மாதம் பங்குனித்திங்கள் இரவு 7.00மணி அளவில் முறிப்புக்குளத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட கல்லை ஊற்றுப்புலக்கிராமத்தில் வசித்து வந்த தங்கவேலாயுதம் நாகேந்திரன் (கிளியன்) அவர்களும் வைரமுத்து கிருஸ்ணராசா என்பவரும் மலையாண்டி செல்லத்துரை ஆறுமுகம் வைத்திலிங்கம் போன்றோரும் ஆலமரத்தடியில் வைத்து கற்பூரம் கொழுத்தி வணங்கி வந்தார்கள் என்றும் பின்பு தொடர் வழிபாடுகள் நடைபெறலாயிற்று என்றும் கோவிலுக்கு அருகில் வசித்து வரும் பாலசிங்கம் வசந்தகுமாரி ஆசிரியை அவர்கள் தற்போது தலைவராக இருக்கும் பென்சனியர் ஜயாக்குட்டிகுணரத்தினமாகிய எனக்குக் கூறினார்கள் இவ்வாலயம் இவ்விடத்தில் அமைவதற்கு முன்னின்று உழைத்தவர் தங்கவேலாயுதம் நாகேந்திரன் என்பவராகும். அன்றிலிருந்து அயலவர்கள் முருகனை வழிபட்டு இஸ்டசித்தியைப்பெற்று வருகின்றார்கள் சிலகாலங்களுக்குப்பின்பு 2003-2004 காலப்பகுதியில் கோயிலுக்கு அண்மையில் குடியேறிய து.வரதராசா அவர்களும் அவரது பாரியாரும் வழிபாடுகளில் ஈடுபட்டு வந்ததாகவும் ஊர்மக்கள் கூறுகின்றார்கள் அயல்வீட்டு வைத்திலிங்கம் மகள் மேகலா விளக்குவைத்து வந்;ததாகவும் கூறுகின்றார்கள்.
மூலஸ்தானம் சிறிய அமைப்பில் கட்டுவதற்கு 2004 ஆண்டு கிளிநொச்சியில் கடமையில் இருந்த சுலோஜினி உதவி அரசாங்க அதிபர் அம்மா அவர்களால் நாள்க்கல்லு நாட்டப்பட்டதாகவும் உருத்திரபுரம் சிவன் கோயில் ஈஸ்வரன் ஜயா அவர்களால் நாள்கல் நாட்டப்பட்ட பூசை நிகழ்வுகள் நடந்தேறியதாகவும் அறிந்துள்ளேன்.
10.07.2004 ம் ஆண்டு மூலஸ்தானத்தில் முருகன் வள்ளி, தெய்வானை கருங்கல் விக்கிரகங்கள் வைக்கப்பட்டு முதலாவது கும்பாபிசேக நிகழ்வுகள் து.வரதராசன் தலைமையில் நடைபெற்றது. தற்போதைய தலைவரான ஜயாக்கட்டி குணரத்தினமஸ்ரீமும் உடன் இருந்துள்ளார்கள். அன்று கோலாகலாமாக பக்திப் பெருக்கோடு முருகனின் அருட்காட்சி ஊற்றுப்புலம் கிராமத்தையே சிறக்க வைத்து சைவசமய மக்களின் மனங்களில் மகிழ்வையும் சந்தோசத்துடன் பெருக்கச் செய்தது. ஒவ்வொருநாளும் தினப்பூசை நடைபெறுவதுடன் தைப்பொங்கல், சித்திரைவருடப்பிறப்பு, ஆடிப்பிறப்பு போன்ற முக்கிய தினங்களில் சிறப்புப் பூசைகளும் நவராத்திரி கந்தசக்ஷ்ட் விரதங்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது தற்போது புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *