
கிளிநொச்சி மாவட்டத்தில் யA9 பாதையின் மேற்கே முறுகண்டி வன்னேரி பாதையில் 6ம் கட்டை பகுதியில் தான் அக்கராயன்குளம் குடியேற்றத்திட்டம் அமைந்துள்ளது. இக்குடியேற்த்திட்டமானது மத்திய வகுப்பு திட்டத்தின் கீழ் விவசாய மேம்பாட்டு நேரக்குடன் 5யு மேட்டுக்காணி 10யு வயல்காணி என காணி இல்லாதோருக்கு வழங்கப்பட்டு மக்கள் குடியேற்றப்பட்டனர்.
இக்கிராமத்தில் தான் அக்கராயன்குளம் அமைந்துள்ளது. இக்குளத்தில் இருந்து தான் இக்கிராம விவசாய நடவடிக்கைகளுக்கான நீர் விநியோகம் இடம்பெற்று வருகின்றது. இவ் நீர் விநியேர்க வாய்க்காலானது வலது கரை இடது கரை என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் வலது கரை நீர் விநியோக வாய்காலின் முகப்புப்பகுதியிலே அருள்மிகு விக்கின விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது.
1948, 1949 ம் ஆண்டு காலப்பகுயில் அக்கராயன் குளக்கட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வேலைக்கென நீர்பாசன தினைக்களத்தில் பணிபுரியும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இவ்வேளை யாவரும் அதிசயிக்கும் வகையில் ஒரு சிலைவடிவிலான கல்லொன்று கண்டெடுக்கப்பட்டது. அதை யாரும் பொருட்படுத்தாமல் வீசிவிட்டு மீண்டும் புனரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் தடங்கலின்றி நடைபெற்ற புனரமைப்புப்பணி பெரும் சிரமத்திற்கு உள்ளானது. இவ்வாறாக வேலை தாமதமடைந்ததை சிந்தித்த போது பொலிகண்டி யாழ்பாணத்தைச் சேர்ந்த திரு திரவியம்பிள்ளை அவர்கள் அச்சிலை வடிவிலான கல்லை எடுத்து நோக்கிய போது அது விநாயகராக காட்சியளித்தது. உடனே அவர் அதை குளத்தின் கழிவு நீர் பாயும் வாய்காலின் மேற்பகுதியில் உள்ள ஒரு மரத்தின் கீழ் வைத்து விளக்கேற்றி வழிப்பட்டார்.அதன் பின் விரைவாக வேலை முடிவுற்றது.
சோழர்காலத்து சிலையாக கருதப்படும் இவ்விநாயகர் சிலையை இக்கிராம மக்கள் பக்தியுடன் வழிபட்டு வந்தனர். அவ்வேளையில் மீண்டும் ஒரு அதியம் நிகழ்ந்தது. விநாயகயருக்கு விளக்கேற்றவென திரு திரவியம் அவர்கள் சென்றபோது அதே திணைக்கள ஊழியர் கல்லுக்கு விளக்கு வைக்க கூடாது என தர்க்கபட்டு விளக்கை எடுத்து வீசிய போது அருகில் இருந்த மரம் முறிந்து வாகனத்தின் மேல் விழுந்த அவருக்கு காயம் ஏற்பட்டது சில மாதங்களின் பின் அவர் திரும்பி வந்து தானே விளக்கேற்றி வழிபட்டார் என கூறப்படுகின்றது.
இப்படியாக தொடர்ந்து விநாயகர் வழிபாடு 1964ம் ஆண்டு காலப்பகுதியில் இயற்கை அனர்த்தம் காரணமாக பாரியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளக்கட்டு உடைந்து வெள்ளப்பொருக்கில் விநாயகர் சிலை முழ்கியது சில மாதங்களின் பின் மண்ணுக்குள் புதையுண்டு கண்டெடுக்கப்பட்டது. பின்பு அந்த இடத்தை விட்டு தற்போது இருக்கும் இடத்தில் ஆலயம் கட்டப்பட்டது 1986ம் ஆண்டு யாப்பு தயாரிக்கப்பட்டு திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.

Leave a Reply