கிளிநொச்சி மாவட்டத்தின், பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில், ஒருகரை எனும் கிராமத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
இவ்வாலயமும் யாழ்ப்பாணம் பாஷையூரைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்ற ஆலயமாகும். தொழில் நிமித்தம் செல்லும் இடங்களில் சிறு சிறு கெபிகளை நிறுவி அப் புனிதர்களின் பரிந்துரை மூலம் தமது தொழில் வளம்பெறவும், தமது கிராமம் பாதுகாக்கப்படவும் விரும்பி இவ்வாறான செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுக்கின்றனர்.
அகஸ்ரின் அன்ரன் என்பவரால் பராமரிக்கப்பட்டுவரும் இவ் ஆலயம் 2012 ஆண்டில் நிறுவப்பட்டு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
2019 காலப்பகுதியில் ஏற்பட்ட கொவிட் 19 தொற்றுநோய் காரணமாக திருவிழா திருப்பலிகள் நடைபெறாதிருந்தது. தற்போது திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

Leave a Reply