கிளிநொச்சி மாவட்டத்தின், பூநகரி பிரதேச செயலர் பிரிவில், கல்முனை எனும் கிராமத்தில் புனித யூதா ததேயு ஆலயம் அமைந்துள்ளது. யாழ்ப்பாணம் பாஷையூரைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் தொழில் நிமித்தம் பயணம் செய்யும் பகுதிகளில் தமது பாதுகாப்பின் காவல் தெய்வங்களாக பல ஆலயங்களை அமைத்துள்ளனர். அவ்வாறு 1974 ஆம் ஆண்டு பாஷையூரைச்சேர்ந்த திரு இராயப்பு சூசைப்பிள்ளை என்பவரால் தற்போது ஆலயம் அமைந்துள்ள இடத்திலிருந்து 75 யார்தொலைவில் புனித யூதாததேயுவானவருக்கென ஒரு சிறிய ஆலயம் அமைக்கப்பட்டது.
அதன் பின்னர் திரு இராயப்பு சூசைப்பிள்ளையவர்கள் ஸ்ராலிங் கோஸ்ரியினரிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க திரு ஆசைத்துரை றூபன் என்பவரின் வழிநடத்துதலில், அன்றைய பாஷையூர் பங்கின் உதவிப்பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அருட்தந்தை குலாஸ் அடிகளாரின் தலைமையில் தற்போது ஆலயம…
[11:27 AM, 3/30/2026] Lurismary: குழந்தை இயேசு ஆலயம், நாச்சிக்குடா, பூநகரி
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில், நாச்சிக்குடா எனும் கிராமத்தில் குழந்தை இயேசு ஆலயம் அமைந்துள்ளது.
இவ்வாலயம் 1992 – 1995 காலப்பகுதியில் இரணைதீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து இப்பகுதியில் குடியேறிய கத்தோலிக்க மக்களின் வழிபாட்டுத் தேவைகளுக்காக உருவாக்கப்பட்டதாகும்.
அரசுக்குச் சொந்தமான காணியொன்றில் களிமண்ணாலான தற்காலிகக் கொட்டிலல் அமைத்து, குழந்தை இயேசுவின் திருச்சொரூபம் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடாத்தப்பட்டது.
2006 ஆம் ஆண்டில் குமுழமுனை பங்கின் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அருட்தந்தை பாஸ்கரன் அடிகளாரால் இவ்வாலயத்தில் முதல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. 2007 ஆம் ஆண்டில் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இவ்வாலயத்தில் மாதாந்தம்திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன.
2008 இல் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து மீண்டும் 2010 இல் மீள்குடியேறினர். அக்காலப்பகுதியில் இடம்பெயர்ந்து இங்கு குடியேறியவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் சென்ற பின் சில குடும்பங்கள் இங்கு நிரந்தரமாகக் குடியேறினர்.
இவர்கள் மீண்டும் ஒரு தற்காலிக ஆலயம் அமைத்து வழிபாடுகளை முன்னெடுத்தனர். அப்போது முழங்காவில் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அருட்தந்தை மரியதாஸ் அடிகளாரால் மாதாந்தம் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் தை மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை திருவிழா கொண்டாடப்பட்டது. அவ்வாறே வருடம்தோறும் தை மாதத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமைகளில் திருவிழா கொண்டாடப்படுகிறது. குழந்தை இயேசுவின் நாளான ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படுகின்றன. அத்துடன் வருடத்தின் விஷேடமான அனைத்துத் திருப்பலிகளும் இங்கு நிறைவேற்றப்படுகின்றன.
2014 இல் மீண்டும் சீமேந்துக் கற்களாலும், கூரைக்கு சீற் பொருத்தப்பட்ட தற்காலிக ஆலயம் அமைக்கப்பட்டது. 2017 – 2019 காலப்பகுதியில் மாகாணசபை, பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டில் ஆலயத்திற்கான சக்கிறிஸ்ரி அறை, நீர்க் குழாய்கள் மற்றும் மலசலகூடம் ஆகியன அமைக்கப்பட்டன. 2019 இல் ஆலய மக்களின் நிதிப் பங்களிப்பில் சிறிய முகப்புப் பகுதியும் அமைக்கப்பட்டது.
2020 ஆம் ஆண்டு தை மாதத்தில் அன்றைய பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அருட்தந்தை சுமன் அடிகளார் புதிய ஆலயத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார்.
29 கத்தோலிக்க குடும்பங்களைக் கொண்ட இவ்வாலயமானது நிர்வாக சபை உறுப்பினர்கள், இளையோர், திருப்பாலத்துவ சபை, மறைக்கல்வி செயற்பாடுகள், முதியோருக்கான ஆற்றுகைகள் என்பவற்றை முன்னெடுத்து சிறப்பாக இயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
தகவல்:- ஆ. நிர்மல குணசீலன், செயலாளர், நாச்சிக்குடா குழந்தை இயேசு ஆலய நிர்வாக சபை

Leave a Reply