செருக்கன் பிள்ளையார் (குஞ்சுப்பரந்தன்)

Posted on

by

இலங்கை திருநாட்டின் வடபால் நெற்களஞ்சியமாக திகழும் கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் பூநகரில் வீதியில் மிக பழமை வாய்ந்த குஞ்சுப்பரந்தன் என்னும் கிராமத்தில் செருக்கன் பகுதியில் விவசாயிகளுக்கு ஏனைய பக்தர்களுக்கும் அருள்பாலிக்கும் முகமாக செருக்கன் குளக்கட்டு விநாயகர் கோயில் கொண்டுள்ளார்.
இவ் ஆலயமானது கிளிநொச்சி மாவட்டம் குடியிருப்பாகும் முன்னர் கச்சாயில் இருந்து தோணி மூலம் குஞ்சுப்பரந்தன் வந்து இறங்குபவர்கள் அதற்கு அண்மித்ததாகவுள்ள கொண்டலியான் என்னம் விநாயகர் ஆலயத்தை வழிபட்டே செல்பார்கள் குஞ்சுப்பரந்தன் விவசாயிகளுக்கம் இதுவே வழிபடும் முதற் கோயிலாக அமைந்திருந்தது. இற்றைக்கு நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னதான காலப்பகுதியில் குஞ்சுப்பரந்தனில் உள்ள விவசாயிகள் மூன்று கிலோமீட்டர் தூரம் சென்று கொண்டடியான் விநாயகரை வழிபடும் கஸ்ரத்தை நீக்கும் முகமாக செருக்கன் குளக்கட்டில் விநாயகரை ஸ்தாபித்து வழிபட்டு வந்தார்கள்.
இவ்வாலயம் ஆரம்பத்தில் சிறு கொட்டிலாக அமைந்திருந்தது. ஆங்கு வசித்த திரு.சின்னத்தம்பி, பரமு திரு.சுப்பர் பொன்னம்பலம், திரு.பொன்னனையா கிருஸ்ணசாமி,, திரு விநாயகமூர்த்தி வேலுப்பிள்ளை, ஆகிய பெரியோர்கள் சேர்ந்து இவ் ஆலயத்தை மடாலய பாங்கில் அமைத்து கீரிமலை வசவேச ஜயா தலமையில் ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தைதாம் ஆண்டு சித்திரை மாதம் புணர்பூச நட்சத்திரத்தில் கும்பாபிக்ஷேகம் செய்யப்பட்டு திரு.பொன்னம்பலம் அவர்கள் ஆலய அர்ச்சகராக நியமிக்கப்பட்டர்.
ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தெட்டாம் ஆண்டு காலப்பகுதியில் திரு.பொன்னம்பலம் அர்ச்சகர் சிவபதமடைய அவர் மகன் திரு .பொ.தர்மலிங்கம் அர்ச்சகராக நியமிக்கப்பட்டு சிறந்த முையில் பூசை செய்யப்பட்டு சிவராத்திரி, திருவெம்பாவை போன்ற விசேட உட்சவ காலங்களில் கவித்துவம் உடைய புராணிகர்களை கூட்டி பாராயணம் செய்து வந்தார்கள்
இதன் பின்னர் கும்பாபிக்ஷகம் செய்து பலகாலம் ஆகிவிட்ட காரணத்தால் ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று மூன்றாம் ஆண்டு பங்குன் மாதம் அச்சுவினி நட்சத்திரத்தில் கிளிநொச்சி கந்தசாமி ஆலய பிரதம குரு பாபுகுருக்கள் தலமையில் சிவஸ்ரீ இரா பாலசுப்பிரமணியக்குருக்கள் அனுசரணையுடன் குடமுழுக்கு செய்யப்பட்டது.
இவ் ஆலயத்தில் சிவராத்திரி, திருவெம்பாவை, சித்திர குப்த விரதம், விநாயகர்சட்டி, கந்தசட்டி, நவராத்திரி மாத சதுர்த்திகள் விசேட பூசைகளாக நடைபெற்று வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *