புதுக்காடு ஐயனார் ஆலயம் (இராமநாதபுரம்)

Posted on

by


அரசாங்கத்தின் கிராம விஸ்தரிப்புத்திட்டத்தின் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தில் இராமநாதபுரம் என்னும் இடத்தில் புதுக்காடு என்னும் கிராமம் 1958ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இக்கிராமத்தில் பழைய கண்டி வீதிக்கு மேற்காக புழுதியாற்றுக்கு அண்மித்ததாக பாலை மரநிழலில் அருள்பாலிக்கும் ஆலயமாக இரண்டு(02) ஏக்கர் விஸ்தரிப்பு நிலத்தில் ஐயனார் ஆலயம் விளங்குகின்றது.
இக்கோயிலானது 1961ஆம் ஆண்டு திரு.திருமதி வைத்தியநாதன் (வைரவன்) நாகம்மா குடும்பத்தினரால் ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்பட்டு வந்தது. பின்னர் 1965ஆம் ஆண்டு அப்பகுதிப் பொதுமக்களால் பொதுக்கோயிலாக பொறுப்பேற்கப்பட்டது.அன்றிலிருந்து ஆலயத்திற்கென நிர்வாக சபை ஒன்றை அமைத்து பூசை ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
அத்துடன் ஐயனார் உருவச்சிலையை வைப்பதற்கு திரு.நடராசா திருநாவுக்கரசு என்பவரின் பங்களிப்பும், மணிக்கோபரம் கட்டுவதற்கு திரு.செ.நடனச்சந்திரன் குடும்பத்தினரும், உள்கிணறு அமைப்பதற்கு திரு.நா.கனகலிங்கம் குடும்பத்தினரும் மேற்கொண்ட பங்களிப்பினால் இவ் ஆலயமானது சிறப்பாக உருவாக்கப்பட்டு பூசை ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு திரு.நா.கனகலிங்கம் குடும்பத்தினரின் பங்களிப்பு முக்கியமயனதாகும்.தொடர்ந்து காலத்திற்கு காலம் நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்தது.
தொடர்ந்து 2000ஆம் ஆண்டு பரிவாரத்தெய்வங்களுக்கான கட்டடங்கள் அமைக்கப்பட்டு தெய்வங்கள் வைக்கப்பட்டது. இந்த வகையில் பிள்ளையார் அமைப்பதற்கு திரு.அ.இராசையா குடும்பத்தினரும், முருகன் அமைப்பதற்கு திரு.ப.திருஞானலிங்கம் குடும்பத்தினரும், வைரவர் அமைப்பதற்கு திரு.க.நாகேந்திரம் குடும்பத்தினரும், நாகதம்பிரான் அமைப்பதற்கு திருமதி.சின்னத்துரை தவமணி குடும்பத்தினரும் வழங்கிய பண உதவியின் மூலம் சிறப்பாக அமைக்கப்பட்டு இயங்கி வருவதுடன் ஆலய வெளி வீதியில் திருமதி.மாணிக்கம் வள்ளிப்பிள்ளை குடும்பத்தினரின் பங்களிப்பினால் புதிய கிணறும் உருவாக்கப்பட்டது.
இவ்வாறாக ஆலயத்திற்கு பல்வேறு அன்பர்களின் உதவியினால் மூன்றுகாலப்பூஜையும் நடைபெற்று வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *