
2005 ஆம் ஆண்டில் பூனகரிப் பங்கின் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் அடிகளாரின் காலத்தில் தம்பிராயில் வசித்த 35 கத்தோலிக்க குடும்பங்களுக்காக பூநகரி பகுதியில் தம்பிராயில் உள்ள காவா குளம் என்னு மிடத்தில் புதிதாக கிறிஸ்து அரசர் ஆலயம் அமைக்கப்பட்டது.
1990 களில் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் பூநகரிப் பங்கின் பங்குத்தந்தையாகப் பணியாற்றியபோது கிறிஸ்து அரசர் ஆலயம் ஒன்றை தம்பிராயில் அமைத்தார். இவ்வாலயத்தைப் புனரமைப்பதற்காக 2005 ஆம் ஆண்டு புனர்வாழ்வு அமைச்சிடமிருந்து நிதியுதவி கிடைக்கப்பெற்றது.
இந் நிதியைப் பயன்படுத்தி 2005 ஆம் ஆண்டில் பூனகரிப் பங்கின் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் அடிகளார் இவ்வாலயத்தைப் புதிதாகப் புனரமைத்துக் கட்டுவதற்கு முயற்சித்தார். அதற்குரிய இடம் போதாமையால், காவாக்குளம், தம்பிராயில்,
அப்போதைய ஆயர் அருட்கலாநிதி தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை அவர்களின் நிதியுதவியுடன் ஒரு ஏக்கர் காணியை ஒன்றரை இலட்சம் ரூபாய்க்கு கொள்வனவுசெய்து புனர்வாழ்வு அமைச்சின் நிதியுடனும், பங்கு மக்களின் நிதிப்பங்களிப்புடனும், அங்கு புதிதாக இவ்வாலயம் அமைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து இடம்பெற்ற உள்நாட்டு யுத்தங்களால் ஸ்ரீலங்கா ராணுவத்தின் ஷெல்வீச்சு மற்றும் விமான குண்டு வீச்சு தாக்குதலால் பாதிப்படைந்த இவ்வாலயம் 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பகுதி பகுதியாக புனரமைக்கப்பட்டு மக்களின் பராமரிப்பில் இயங்கிவருகின்றது.
அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அவர்களால் அமைக்கப்பட்ட பழைய கிறிஸ்து அரசர் ஆலயமானது, இப்புதிய ஆலயம் அமைக்கப்பட்டதன் பின் கிறிஸ்து உலக இரட்சகர் ஆலயம் என 2019ம் ஆண்டில் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.
வருடந்தோறும் கத்தோலிக்க திருவழிபாட்டு நாட்காட்டியில் குறிப்பிடப்படும் திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படுகின்ற கிறிஸ்து அரசர் பெருவிழா அன்று இவ்வாலயத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
தகவல்:- அருட்தந்தை J. A அருள்தாசன், முன்னைநாள் பங்குத்தந்தை, பூநகரி

Leave a Reply