கல்லாறு குழந்தை இயேசு ஆலயம், கண்டாவளை

Posted on

by

hhhh

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கல்லாறு எனும் கிராமத்தில் குழந்தை இயேசுவின் ஆலயம் அழகுற அமைந்துள்ளது.

2004 இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் வீடுகள், சொத்துக்களை இழந்த மக்கள் இப்பகுதியில் 2005 ஆம் ஆண்டளவில் குடியேற்றப்பட்டனர். அக்காலத்தில் இங்கு குடியேறிய 35 இற்கும் மேற்பட்ட கத்தோலிக்க மீனவ குடும்பங்களின் வழிபாட்டுத் தேவைகளுக்காக இவ்வாலயம் அமைக்கப்பட்டது.

ஆரம்பத்தில் கல்லாறு கிராமத்தில் அமைந்திருந்த பாடசாலைக் கட்டடத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அன்றைய பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை ரவிராஜ் அடிகளார் அவர்கள் அம் மக்களின் வழிபாட்டுத் தேவைகளை நிறைவேற்றினார்.

2006 இலிருந்து ஆலயம் கட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன் அங்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. 2008 இடப்பெயர்வு, மீள் குடியேற்றத்தின் போது அங்கு வசித்த பல குடும்பங்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் சென்ற பின்னர் தற்பொழுது அங்கு 10 குடும்பங்கள் வசிக்கின்றனர்.

2006 இல் ஆரம்பிக்கப்பட்ட ஆலய கட்டுமானப் பணிகள் 2015 இல் நிறைவுபெற்று அருட்தந்தை நிக்சன் கொலின் அடிகளாரின் காலத்தில் திறந்துவைக்கப்பட்டது. இவ்வாலயத் திருவிழா மாசி மாதத்தின் 3ம் ஞாயிறு தினத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. தர்மபுரம் புனித சவேரியார் ஆலய பங்கின் துணை ஆலயமாக இவ்வாலயம் அமைந்துள்ளது. தற்போது அருட்தந்தை றேமன் றெனால்ட் அடிகளார் பங்குத்தந்தையாகப் பணியாற்றி வருகிறார்.

தகவல்:- திரு ஸ் ரீபன், பங்கு இறைமக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *