பூநகரி ஞானிமடம் வாழ் சைவப்பெரியாரும் பொறிக்கடவை அம்மனின் முன்னைய
நாள் பூசகரும் அருள்மிகு திருக்கேதீஸ்வர தேவஸ்தானத்தில் அமைந்துள்ள நடராசர் மட ஸ்தாபகரும் அப் பகுதியில் கடமை புரிந்தவருமான திரு நாகலிங்கத்தினுடைய இரண்டாவது புத்திரனும் நில அளவை பகுதியில் கடமை புரிந்தவருமான நாகலிங்கம் இராமசாமி அவர்களால் ஞானிமடத்தில் உறையும் கொட்டில் பிள்ளையார் நினைவாக டீழுனு நில அளவைப் படத்தின் படி காணி இலக்கம் 32 இல் (தனது காணியில் ) 1970 ஆவணி மாதம் பிள்ளையார் ஸ்தாபிதம் செய்யப்பட்டு இவரது மாமனார் குழந்தைவேலு என்பவரால் பூசை செய்து வரப்பட்டது.
மேற்படி குடியேற்றத் திட்டம் பூநகரி வாழ மக்களுக்கு ஞானிமடம் கறுக்காய் தீவு செட்டியகுறிச்சி மட்டுவில் நாடு ஆகிய பிரதேச மக்களுக்கு தலா 02 ஏக்கர் படி பகிர்ந்தளிக்கப்பட்டது. பகிர்ந்தளிக்கப்படும் அக் காலத்தில் பலர் குடியேற்றத்தில் தங்கமுடியாத நிலைகள் இருந்தன. ஆயினும் அத் திட்டத்தில் நாகலிங்கம் இராமசாமி திருநாவுக்கரசு கிருஸ்ணசாமி ஆகிய மூவர் மட்டும் பல இன்னல்களுக்கு மத்தியில் காணிகளை சுத்தம் செய்து தென்னை மா பலா போன்ற நெடு வாழ் பயன்தரு மரங்களை நாட்டி பல சிரமங்களின் மத்தியிலும் பராமரித்து வந்தனர்.
அக் காலத்தில் இக் காணித்துண்டுகளுக்கு போக்குவரத்து வசதிகள் ஏதும் இல்லாதாது கொப்பு நரி என்று கூறப்படுகின்ற கால் அடிப்பதை மட்டும் இக் காணிகளை இணைக்கும் போக்குவரத்துப் பாதையாக இருந்தது. அது மட்டும் அல்லாதாது ஆள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த காடுகளையும் பற்றைக் காடுகளையும் இப் பிரதேசத்தின் தன்மையாகக் கொண்டாதாக இருந்தது. மேலும் இங்கு யானை மான் மரை பன்றி போன்ற விலங்குகளையும் கொடும் விசம் கொண்ட பாம்பு போன்ற விச ஐந்துகளையும் கொண்டு காணப்பட்டன. ஆத்துடன் இத்தகைய சூழல் காரணமாக காணிகள் பெற்ற பயனாளிகள் தங்களது காணியை திருத்தவோ பயன்படுத்தவோ இடர் உற்று பின்னடைந்து நின்றனர்.
மேற் குறித்த இடம் சார்ந்த சூழலில் ஏலவே குறிப்பிட்ட மூன்று பயனாளிகளும் தங்களது காணிகளில் பயன்தரு மரங்களை நட்டுப் பராமர்த்து வந்தனர். ஆனாலும் யானை பன்றி போன்ற மிருகங்கள் பயன்தரும் மரங்களை அடிக்கடி துவம்சம் செய்து வந்தன. ஆக் காலத்தில் இத்தகைய விலங்குகளை எதிர்த்து போராட வலுவற்றவர்களககவும் அத்துடன் எந்த வித போர் உபகரணங்கள் இல்லாமையாலும் இங்குள்ள மக்கள் துயருற்று இருந்தனர்.
இத்தகைய சூழலில் இவர்கள் தங்களையும் தங்களது பயரினங்களையும் பாதுகாக்க கடவுளை தஞசமடையும் நிலையில் இருந்தது. இதன் காரணமாகவே ாஆச்சரியப்படும் விதத்தில் ஸ்ரீ சர்வ விக்ன விநாயகர் அருளில் எந்த வித காட்டு விலங்குகளின் இடைêறுகளும்; இல்லாமால் இவர்கள் இருந்தனர்.
இத்தகைய சூழலில் ஸ்ரீ சர்வ விக்ன விநாயகரை தனிப்பட்ட ஒரு காணியில் வைத்து வணங்க மக்கள் விரும்பியமையாலும் எம் பெருமானுக்கு தனியான ஒர் ஆலயம் கட்டும் ஆவல் மீதுரப் பெற்றமையாலும் பொதுவாக இருந்த பாலையடி காணியில் 1975ம் ஆண்டு ஸ்ரீ சர்வ விக்ன விநாயக பெருமானை திருநாவுக்கரசரின் ஆலோசனையின் பெயரில் திரு. நா.இராமசாமியும் திரு.திருநாவுக்கரசரும் பிைதிஸ்டை செய்தனர். அன்று முதல் இன்று வரை பிரதேச வாசிகள் அனைவரும் பொதுவாக எம் பெருமானுக்கு நேர்த்திகள் செய்து வணங்கிவரலாயினர் இங்கனம் இருக்கையில் 1983ம் ஆண்டு நில அளவைக்கு உட்படுத்தப்பட்டது அப்போது அப் பகுதியினருடன் நா இராமசாமியும் இணைந்து வேலை செய்தனர். அவரது விடா முயற்சியாலும் எம் பெருமானுக்கு தலத்தை தாபிக்க வேண்டும் என்ற அர்பணிப்பினால் நில அளவைப்பிரிவு உயர் உத்தியோகத்தரின் ஆதரவை பெற்று எம் பெருமானுக்கு ஒர் ஆலயம் கட்டுவதற்கு 144ம் இலக்க காணிக்கும் 145 காணிக்கும் இடையில் 2 ஏக்கர் நிலத்தை நிலத்தை நில அளவை செய்யும்போது ஒதுக்கப்பட்டது. ஆயினும் பின்னர் ஏற்பட்ட நிகழ்வுகளால் 1 ஏக்கராக குறுகி விட்டது தற்போது திரு.நாகலிங்கம் இராமசாமியின் பெரும் முயற்சியாலும் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் கார்த்திகேசு யோகராசா அவர்களின் உதவியாலும் மற்றும் உதவி அரசாங்க அதிபர் வசந்தகுமார் கேணல் ெஐயசூரிய கிராம சேவகர் எஸ். தவராசா கணபதிப்பிள்ளை கந்தசாமி யோசப் ஆனந்தம் தேவராசா சசீதரன் கணபதிப்பிள்ளை பாலசிங்கம் என்பவர்களின் அளப்பரிய அனுசரணையாலும் தற்போது இவ் ஆலயத்திற்கு ஒதுக்கப்பட்ட காணியில் நீள அகலங்களில் எம் பெருமானுக்கு ஆலயமும் ஆலய வளாகமும் நிர்மானிக்கப்பட்டது. இதற்குரிய முழுச்செலவையும் திரு. நாகலிங்கம் இராமசாமி அவர்கள் ஏற்றுக்கொண்டார் என்பது விடயமே.
கர வருடம் வைகாசி மாதம் 32 ம் நாள் பௌர்ணமி நன் நாளில் அருள் மிகு ஸ்ரீ சர்வ விக்ன விநாயகப் பெருமானுக்கு புதிய மண்டபத்தில் பரதிஸ்டை செய்து கும்பாபிக்ஷேகம் செய்யப்பட்டு பிரதேசவாசிகள் அனைவரும் ஸ்ரீ சர்வ விக்ன விநாயகப் பெருமான் அருள் பெற்று சென்றமை பெருமைக்குரிய விடயமே.

Leave a Reply