கோட்டை ஆதிவிநாயகர் ஆலயம் (ஊற்றுப்புலம்)

Posted on

by

இவ்வாலயமானது ஊற்றுப்புலம் வள்ளுவர் பண்ணைக் கிராமத்தில் அமைந்துள்ளது 1985ம் ஆண்டு குருகுல நிர்வாகியன திரு.கதிரவேலு அப்புஜி அவர்களின் தலைமையில் மக்களின் ஒத்துழைப்போடு உருவாக்கப்பட்டது. இவ் விநாயகர் கோயில் ஆரம்ப கால கட்டத்தில் ஆதி விநாயகர் என்னும் நாமத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின் மக்கள் அனைவரும் குடியமர்த்தப்பட்டதும் பண்டைக்கால அரசர்களின் கோட்டைளின் அமையாளச் சின்னங்கள் பல காணப்பட்டதாலும் கோட்டைக்கு முன் பக்கமாக ஆலயம் அமைந்தாலும் கோட்டை ஆதி விநாயகர் என்னும் திருநாமம் பெற்றது.
இவ்வாலயத்தின் சிறப்பு என்னவென்றால் எல்லா இடங்களிலும் குடிகள் அமைக்கப்பட்ட பின்னரே ஆலயம் அமைக்கப்படும் ஆனால் இங்கு ஆலயம் ஆமைக்கப்பட்ட பின்னரே குடிகள் அமைக்கப்பட்டன. அத்தோடு குடிமக்கள் தமது இருப்பிடத்தை அமைப்பதற்கு முன்னர் குடிநகர் சேவையின் பொருட்டு அனைவரும் சேர்ந்து கிணறு வெட்டியும் நீர் கிடைக்கவில்லை என்ற மனவருத்ததுடன் குருகுலம் சென்று அடுத்த நாள் இருப்பிடம் அமைக்க வந்த போது வற்றாத கங்கைபோல் கிணறு நிறைந்து நீர் வழிந்தோடியது. எனவே மக்கள் அனைவரும் ஆதி விநாயகரின் மகிமை என்று கூறினர். நீர் ஊற்றெடுத்து வழிந்தோடியதால் இக் கிராமத்திற்கு ஊற்றுப்புலம் என்றும் இவ் ஆலயத்திற்கு ஊற்றுப்புலம் கோட்டை ஆதி விநாயகர் என்ற பெயர்பெற்று விநாயகப் பெருமான் இன்றுவரை மக்களுக்கு அருள் பாலித்துக்கொண்டிருக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *