
மேற்படி ஆலயமானது 1978 ஆம் ஆண்டு திருவாளர் செ.சற்குருநாதன் பொ.தில்லையம்பலம், பெ.சூரியமூர்த்தி, க.தவக்குமார், வை.சரவணமுத்து ஆகியோருடன் இன்னும் பல அடியவர்கள் இணைந்து ஆரம்பித்து வைத்தார்.
சிறிய குடிலில் இருந்த அம்பாள் 1992ல் சுற்றிவர விநாயகர் சுப்பிரமணியர், சனீஸ்வரர், நாகதம்பிரான், வைரவர் சூழ மடலாய கும்பாபிக்ஷேகம் இடம் பெற்றது. மூலஸ்தானத்தில் மீனாட்சி அம்பாள், நடேசர், சிவகாமசுந்தர், மாணிக்கவாசகர் ஆகியோரின் ஜம்பொன் சிலைகள் வசந்த மண்டபத்திலும் இடம்பெற்றிருந்தன் இவையர்வும் 1996ல் ஏற்பட்ட இடம் பெயர்வின் பின் 2000 ஆண்டளவில் ஆலய விக்கிரகங்கள் ஒன்றும் காணப்படவில்லை
பின்னர் குடமுழுக்கு கோயிலாக மூலஸ்தான கட்டடத்தை வியாழவரிக்கு மேல் அமைத்தனர் 2008ல் இடம் பெயர்வின் பின் 2009ல் பார்க்கும் போது கட்டடம் சிதைவடைந்து காணப்பட்டது அப்போது பரிபாலன சபை தலைவராக இருந்த திரு த.ரஜினிகாந்தன் அவர்களும் நிர்வாகசபை உறுப்பினர்களும் அடியவர்களும் இணைந்து எடுத்த முயற்சியினால் விநாயகர், சுப்பிரமணியர்,வள்ளி, தெய்வானை, நாகம்மாள், வைரவர், தட்சிணாமூர்த்தி , நவக்கிரகம், சண்டேஸ்வரி ஆகிய பரிவாரங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டு 01.07.2018ல் மகா கும்பாபிக்ஷேகம் நடைபெற்றது. 2019 ல் முன்னாள் தலைவராக இருந்த திரு.க.நடராசா அவர்க்ளின் தலைமயில் தேர் திருப்பணிச்சபை ஆரம்பிக்கப்பட்டு தேர் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 2022 ம் ஆண்டு முதன்முறையாக சப்பறம் ஆகியவற்றுடன் மகோற்சவம் இடம் பெற்றது.

Leave a Reply