
1970 ஆம் ஆண்டு திரு கந்தையா பொன்னையா குடும்பத்தினர் மேற்படி கிராமத்தில் காடுவெட்டி குடியிருந்தன. இக்கால கட்டத்தில் அன்னாரின் கனவில் உருவாகிய மனநிலையில் இந்த அம்பாளுக்கு ஒரு மரத்தின் கீழ் சிலையை வைத்த வணங்கி வந்தார் மேலும் மக்கள் இந்தகிராமத்தில் குடியமர்ந்து அவர்கனது இந்த தெய்வத்தை ஆதரித்து நேர்த்திகள் வைத்து பக்தியுடன் வணங்கி வந்துள்ளார்கள். இப்படியிருக்கும் போது சிறிது சிறிதாக இக்கோயிலில் பக்தர்கள் கூட அரம்பித்து இதற்கென சிறு காணித்துண்டையும் ஒதுக்கி சிறு ஆலயத்தை உருவாக்கி நித்திய பூசைகள் செய்து வரத் தொடங்கினார்கள்.
இப்படியிருக்கும் நிலையில் கடந்த காலசூழ்நிலையில் இவர்காலமாகிவிட்டார். இவரின் மனைவி திருமதி நல்லநாயகியம்மா இக்கோயிலை பாரமரித்து வந்த நிலையில் பக்தர்களின் வேண்டுகோளின் பிரகாரம் இக்கோயிலுக்கு பரிபாலனசபையை நிறுவி பொதுக்கோயிலாக பதிவு செய்வதற்கும் இக்காணியை கோயிலுக்கு நன்கொடையாக கொடுத்து தற்போது இக்கோயிலுக்கு சுற்றுமதில் கட்டி புனரமைத்து நித்திய பூசைகளும் ஒழுங்காக நடைபெற்று வருகின்றது.

Leave a Reply