
புதுமுறிப்பு சோலைநகர் கிராமத்தில் 1980ம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து மக்கள் காடுகளை வெட்டி குடியேறினார்கள். புதுமுறிப்புக்கும் சோலைநகருக்கும் இடையில் இடைவெளி தூரம் கூடுதலாக இருந்த காரணத்தால் எமது பகுதியில் ஆலயங்கள் இல்லாத காரணத்தாலும் ஆலயங்கள் ஒன்றை அமைப்பதற்கு மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செல்வர் சரவணமுத்து என்பவரிடம் 1987 ம் ஆண்டு ஜப்பசி மாதம் 5ம் திகதி காடாக இருந்த ஒரு காணித்துண்டை வாங்கி மக்கள் அனைவரும் துப்பரவு செய்து 1988ம் ஆண்டு மாசி மாத சிவராத்திரி அன்று பிள்ளையார் சிலை வைக்கப்பட்டு பூசைகள் நடைபெற்றன. அன்று தொடக்கம் இன்று வரை சிவராத்திரி உற்சப விழாவாகக் கொண்டாடப்படுகின்றது. வேறு உற்சபங்களாக சித்திரைப்பௌர்ணமி, ஆவணிச் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை திருவம்பா பூஜை என்பன நடபெற்றுவருகின்றன.

Leave a Reply