
இவ் ஆலயம் 1954ம் அண்டு சிறு கோயிலாக கிராமிய வழிபாட்டுத் தெய்வமாக இக் கிராம மக்களாலும் விவசாய செய்கையில் ஈடுபடும் விவசாயிகளினாலும் வழிபடப்பட்டு வந்தது. காலம்சென்ற திரு மு.ராமநாதன் அவர்களின் முயற்சியினால் 1992 இல் சிறந்த வழிபாட்டுத்தலமாகவும் ஆகம முறைப்படி பூசைகள்வழிபாடுகள்நடைஅபறவும் வழி ஏற்ப்பட்டது. ஆடி அமாவாசை அன்று தந்தையை இழந்தவர்கள் தமது பிதிர்கடன்களை செய்வதற்கு ஏற்றவாறு திருவிழா ஒழுங்கமைப்பு செய்யப்பட்டு சிறப்பாக நித்திய நைமித்திய பூசைகள் நடைபெற வாய்ப்பினைப் பெற்றுக்கொடுத்தார்.
1998 இல் இடம்பெற்ற இடப்பெயர்வின் பின்பு புனராவர்த்தனம் மற்றும் கும்பாவிக்ஷேகம்; நடைபெற்று ஆகம விதிப்படி நித்திய நைமித்திய பூசைகள் இடம்பெற்றன. 2008 இல் இடம்பெற்ற வன்செயலின் பின்னர் மீளக்குடியேறிய மக்கள் தமது ஜீவனோபாய தொழிலான விவசாயாத்தில் ஈடுபட்டு அதில் கிடைத்த வருமானத்திலிருந்தும் தண்ணீர்ப்பங்கு ஏல விற்பனை மூலம் கிடைத்த சிறு தொகையுடன் தற்போது கட்டுமானப்பணிகள் நிறைவுற்று ஆலயம் பொலிவுடன் காணப்படுகிறது.

Leave a Reply