கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குமுழமுனை எனும் கிராமத்தில் புனித அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது.
போர்த்துக்கேயர் இலங்கையைக் கைப்பற்றியபோது இலங்கையின் கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றியதாக வரலாற்றிலிருந்து அறியமுடிகின்றது. அந்த வகையில், குமுழமுனை புனித அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் போர்த்துக்கேயர் காலத்தில் மீனவக் கத்தோலிக்கர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கான வரலாற்றுக் குறிப்புகள் அருட்தந்தை பெர்னாவ் டீ குயெய்ரோஸ் அடிகளாரின் ” Conquista Temporal e Espiritual de Ceylao” என்ற நூலில் காணக் கிடைக்கின்றது. இவர் ஒரு இயேசு சபைக் குரு ஆவார். கோவாவிலிருந்து இலங்கை மறைபரப்புப் பணிகளை ஒருங்கிணைத்து 1505 – 1658 வரை போர்த்துக்கேயர் காலத்தில் இலங்கையில் கத்தோலிக்கம் பரவிய வரலாற்றைத் தனது நூலில் பதிவு செய்துள்ளார்.
1544 இல் மன்னார் மறைசாட்சிகள் 600 பேரைக் கொலை செய்ய சங்கிலி மன்னனால் அனுப்பப்பட்ட படைகள் பூநகரி வழியாகவே மன்னார் சென்றதாக இவர் குறிப்பிடுகின்றார். இக்காலத்தில் பூநகரிப் பகுதி கத்தோலிக்கர்கள் தலைமறைவாக வாழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இவரது நூலிலுள்ள “Palm grove settlement” என்ற குறிப்பின்படி குமுழமுனை பகுதியில் மீனவ கிறிஸ்தவர்கள் வாழ்ந்திருக்கலாம் எனவும், அங்கு ஒரு சிறு சிலுவையுடன்கூடிய சிறிய செபக்கூடம் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
அதன் பின்னர் ஒல்லாந்தர் ஆட்சியில் கத்தோலிக்க ஆலயங்கள் அழிக்கப்பட்டன. 1800 களில் ஆங்கிலேயர் காலத்திலேயே இவ்வாலயம் கட்டப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அதனடிப்படையில், 1867.06.24 இல் பதிவு இலக்கம் 312 இல் இவ்வாலயம் சிற்றாலயமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளமை 1957 அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அங்கு 15 கத்தோலிக்க குடும்பங்கள் வசித்துள்ளனர்.
1918 இல் இவ்வாலயத்தைக் கல்லால் கட்டுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. 1918 – 1923 காலப்பகுதியில் அத்திவார வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அருட்தந்தை ஹென்றி மோரோ OMI அடிகளார் குமுழமுனை, நாச்சிக்குடா, வலைப்பாடு, இரணைதீவு பிரதேசங்களில் பணியாற்றியபோது, ஒரு பள்ளியை ஆரம்பித்ததுடன், குடிநீர் வசதி மற்றும் இயந்திர மீன்பிடிக் கலையையும் அறிமுகப்படுத்தினார்.
1933 – 1935 காலப்பகுதியில் அருட்தந்தை சிமியோன் கோமஸ் OMI அடிகளார் பணியாற்றினார். 1955 – 1959 இல் பணியாற்றிய அருட்தந்தை வில்லரசிங்கம் அடிகளார் காலத்தில் ஆலயத்தில் குருக்கள் தங்குவதற்கான குருமனை கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இவரது பணிக்காலத்தில் தரம் 03 இல் கல்வி பயின்ற செபநேசரட்ணம் எனும் சிறுவனை யாழ் புனித பத்திரிசியார் கல்லூரிக்கு விடுதி மாணவனாக அனுப்பி வைத்தார். இவ் ஆரம்பத்தினால் அருட்தந்தை செபநேசரட்ணம் எனும் குருமணியின் உருவாக்கத்திற்குக் காரணமானார்.த் தனது

Leave a Reply