புனித மரியாள் ஆலயம், சோலை, நாகபடுவான், பூநகரி

Posted on

by

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கரியாலை நாகபடுவான் பிரதேச சோலை எனும் கிராமத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

1970 களில் நெடுந்தீவிலிருந்து இங்கு வந்து குடியேறிய மக்களுக்காக சோலை குடியேற்றத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு குடியேறிய கத்தோலிக்க குடும்பங்களின் வழிபாட்டுத் தேவைகளுக்காக ஒரு கொட்டில் ஆலயம் அமைக்கப்பட்டது. 1972 இல் அருட்தந்தை கொன்சால்வெஸ் அடிகளார் இப்பகுதியில் பணியாற்றிய காலத்தில் இவ்வாலயம் அமைக்கப்பட்டது.

அப்போது 05 கத்தோலிக்க குடும்பங்கள் இங்கு குடியேறியிருந்தனர். தற்போது 22 கத்தோலிக்க குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

காலப்போக்கில் ஆலய வளவில் மலசலகூட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. ஆயினும் அவை தற்போது பாவிக்க முடியாத நிலையிலுள்ளது.பல்வேறு இடப்பெயர்வுகள், யுத்த சூழ்நிலைகளிலும் இவ்வாலயம் அழிவடையாது இன்றும் திருப்பலிகள்நிறைவேற்றப்படுகின்றன. ஆயினும் ஆலய சுவர்கள் பழுதடைந்து காணப்படுகின்றன.

தற்போது அருட்தந்தை அன்ரனிபாலா அடிகளார் பங்குத்தந்தையாகப் பணியாற்றி வருகின்றார். இவ்வாலயத் திருவிழா புரட்டாதி மாதம் 08 திகதி வருடம் தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *