இலங்கை திரு நாட்டின் கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சா தீவு என்னும் சிறிய கிராமத்தில் இற்றைக்கு 1800 ம் ஆண்டு காலப்பகுதியளவில் பூசாரி கந்தர் என்பவரால் ஆதாரிக்கப்பட்டு வந்த ஆலயமே உமையாள்புரம் கண்ணகி அம்மன் ஆலயம் ஆகும். பூசாரியார் கந்தரினைத் தொடர்ந்து அவரது வழித்தோன்றல்களால் வந்துதித்த பூசாரி கந்தையா இபூசாரி சரவணை பூசாரி ஸ்ரீமான் செல்லத்துரை என்பவர்களால் சிறிய ஆலயம் அமைத்து அம்பாளுக்கு விசேட பூசை பொங்கல் வழிபாடுகள் செய்யப்பட்டு வந்தன.
ஸ்ரீமான் செல்லத்துரை பூசாரியால் பூசை வழிபாடுகள் செய்யப்பட்டு வந்த வேளையில் ஆனையிறவு உப்பளம் விஸ்தரிப்பு செய்ய வேண்டுமெனக் கூறி இவ் ஆலயம் குடியிருந்த காணியினை விடுவிக்க கோரியும் ஆலயத்தினை வேறு இடத்திற்கு எடுத்து செல்லுமாறும் அக் காலத்து அரசாங்கத்தினரால் பூசாரியாருக்கு அறிவிக்கப்பட்டது. பூசாரியரும் மனங் கலங்கியவாறு தம் பரம்பரையினரால் வழிபாடு செய்யப்பட்டு வந்த குல தெய்வமான கண்ணகை அம்பாளினையும் பெரும்படை தெய்வங்களையும் கடகம் ஒன்றில் வைத்து தலையில் சுமந்தவாறு கால் போன போக்கிலே நடந்து வந்தார் .
களைப்படைந்த பூசாரியார் அளைப்பாறுதற்காக அம்பாள் இப்பொழுது வீற்றிருக்கும் உமையாள்புரம் பதியின் ஒர் மரத்தடியில் அம்பாளினை இறக்கி வைத்துவிட்டு அம்மாவே உமக்கு கோயிலைமைக்க ஏற்ற இடம் எதுவோ என கலங்கியவாறு உறங்கிவிட்டார். அவ் வேளை அம்பாளே அவர் கனவில் தோன்றி இவ் அடமே எனக்கு ஏற்றது. எனக் கூறிச்சென்ற பூசாரியாரும் யு-9 வீதிக்கருகமையில் உள்ள இவ் உமையாள்புரம் பதியிலே கோயிலமைத்து பொற்கல் வழிபாடுகள் ஊர் மக்களின் ஒத்துழைப்போடு மிகவும் சிறப்பாக செய்து வந்தார். இவரைத் தொடர்ந்து பூசாரியரின் மூத்த மகன் கதிர்காமசாமி என்பவரால் ஆலய விழாக்கள் நிர்வக்க்கப்பட்டு வந்தன.
2019 ம் ஆண்டாளவில் கதிர்காமசாமி என்பவரின் மூத்த மகன் பூசாரி சுகுமார் என்பவரால் இன்று வரை அம்பாளுக்கு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

Leave a Reply